• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

முருங்கை இலையின் பயன்

+2 votes
முருங்கில் இலையின் பயன்கள் என்ன என்ன?
asked May 20, 2013 in சித்தமருத்துவம் by revathy (196 points)
edited May 28, 2013 by rradhac
   

1 Answer

+1 vote
முருங்கை இலையை உட்கொண்டால் 300இற்கும் மேற்ப்பட்ட வியாதிகள் குணமாகும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

முருங்கை இலையில் 90 ஊட்ட சத்துகள் உள்ளன

* முருங்கை இலையில் வைட்டமின் எ, வைட்டமின் க, அமினோ ஆசிட்ஸ் மற்றும் கால்ஷியம் அதிகம் உள்ளது.

* இதனால் கண், எலும்பு, இதயம்,நரம்பு சம்மந்த பட்ட பிரச்சனைகளை குணப்படுதிகிறது.

* முருங்கை இலை வயிற்று போக்கை கட்டுப்படுத்துகின்றது.

* உடம்பின் அணுக்கள் வளர உதவுகின்றது.

* முருங்கை இலை சாரை கர்பிணி பெண்கள் உட்கொண்டால் இரத்த சோகை மற்றும் கால்ஷியம் பற்றா குறையை போக்குகிறது.

* வேக வைத்த முருங்கை இலையை பற்றாக உடம்பில் தடவினால் மூட்டு வலி,நரம்பு வலி, தலை வலி, பருக்களிடமிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* சரும பொலிவை கூட்டும்.கண் மற்றும் மூளைக்கு நல்ல போஷாக்களிக்கும்

* உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்

* உடலின் ஜீவத்துவ பரிணாமத்தை அதிகரிக்கும்.சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

* கிருமி எதிர்ப்பு தன்மை இயல்பாக இந்த இலையில் உள்ளதால் தொண்டை,தோல்,இதயம் சார்ந்த கிருமி ஒட்டுதல்களை தடுக்கும்.

* ஒரு கப் முருங்கை இலையில் காரட் ஐ விட நான்கு மடங்கு அதிகம் வைட்டமின் எ உள்ளது.

* ஒரு கப் முருங்கை இலையில் ஆரஞ்சு பழத்தை விட ஏழு மடங்கு அதிகம் வைட்டமின் சி உள்ளது

* ஒரு கப் முருங்கை இலையில் பாலை விட நான்கு மடங்கு அதிகம் கால்சியம் உள்ளது.
answered May 20, 2013 by kelvirani (842 points)
edited May 21, 2013 by rradhac
...