• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

திருக்குறள்

+5 votes
திருக்குறளில் 1330 குறள்  உள்ளது .அதில் உங்களுக்கு பிடித்தமான குறள்கள்
asked May 29, 2013 in வரலாற்று பதிப்புகள் by தமிழன் (6,854 points)
   

19 Answers

+1 vote
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு!
விளக்கம்:
ஒரு காரியத்தில் இறங்கும்போது எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்!
அப்படி ஆராய்ந்து அந்த காரியத்தில் இறங்கியபின் பிறகு அதைப்பற்றி எண்ணுவது குற்றமாகும்!
answered May 29, 2013 by Chester (1,152 points)
+1 vote
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
answered May 31, 2013 by bookworm (4,420 points)
+1 vote
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

இந்த குறளை நான்  அடிக்கடி மேற்கோள்காட்டுவேன்.

உடனே எனது அக்கா " அவர் நாண " அவர் நாணவே இல்லனா என்ன பண்ணுறதுன்னு கேட்ப்பா.

எனக்கு மிகவும் பிடித்த குறள் . எனது வாழ்வில் நான் கடைசி வரை கடைபிடிக்க நினைக்கிற குறள் .
answered May 31, 2013 by premalatha (2,494 points)
+1 vote
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர் சேர்ந்தொழுகு வார் ...

அலுவலகங்களிலும் அனைவரிடமும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒரு கருத்து...
answered Jun 21, 2013 by BlitzkriegKK (6,860 points)
+1 vote
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்
answered Jun 23, 2013 by Radha Raghunathan (858 points)
+1 vote

குறள்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

விளக்கம் :

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

answered Jul 15, 2013 by varul (1,758 points)
+2 votes

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

answered Jul 15, 2013 by anjvelu (3,018 points)
+1 vote

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

answered Aug 6, 2013 by anjvelu (3,018 points)
+1 vote

இந்தக் கேள்விக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பதில் சொல்வேன். இப்போது,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

answered Aug 7, 2013 by tkan75 (218 points)
0 votes

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்.

answered Sep 25, 2013 by anjvelu (3,018 points)
0 votes

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று .

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

answered Sep 25, 2013 by Bhuvaneswaryraja (1,454 points)
0 votes

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

answered Sep 26, 2013 by anjvelu (3,018 points)
0 votes

" மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். "

மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

answered Sep 30, 2013 by anjvelu (3,018 points)
0 votes

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்."

மு.வ உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

answered Oct 1, 2013 by anjvelu (3,018 points)
0 votes

ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.

மு.வ உரை : மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

answered Oct 17, 2013 by anjvelu (3,018 points)
...