• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

திருக்குறள்

+5 votes
திருக்குறளில் 1330 குறள்  உள்ளது .அதில் உங்களுக்கு பிடித்தமான குறள்கள்
asked May 29, 2013 in வரலாற்று பதிப்புகள் by தமிழன் (6,854 points)
   

19 Answers

0 votes

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

answered Feb 6, 2014 by premalatha (2,494 points)
0 votes

யாகா வராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு.

ஒருவர் எதை காக்காவிட்டாலும் தன் நாக்கை மட்டும் அடக்கி ஆளவேண்டும். அப்படி ஆளாவிட்டால் சொற்குற்றத்தில் அகப்பட்டு துன்புறுவர்.

இந்த குறல் எனது பத்தாம் வகுப்பில் முதன்முதலாக எல்லோர் முன்னிலையிலும் மிக உரத்த குரலில் சொன்னது நினைவில் இருக்கிறது.
நன்றி.

answered Jan 2, 2016 by PARTHIBAN.G (1,540 points)
0 votes

குறள்:
யாகா வராயினும் நாகாக்க காவாக்கால்
சோகா ப்பர்சொல்லிழுக்க்ப் பட்டு.

விளக்கம்:
ஒருவர் எதை காக்காவிட்டாலும் தனது நாவை மட்டும் அடக்கி ஆளவேண்டும். அப்படி ஆளாவிட்டால் சொற்குற்றத்தில் அகப்பட்டு துன்புறுவர்.

கருத்து:
நமக்கு முதல் எதிரி நமது நாக்கு தான். ஒருவரை நண்பராகவும் எதிரியாகவும் மாற்றுவது நமது வார்த்தைகளின் மகிமைதான். எனவே எல்லோரும் நல்லதையே பேசுன்ங்க. வாழ்க்கை வசந்தமடையும். நன்றி.

answered Mar 2, 2016 by PARTHIBAN.G (1,540 points)
0 votes

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

விளக்கம் : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

குறிப்பு : "மாடல்ல" - மாடு என்ற சொல்லுக்குப் பொருள் என்றும் செல்வம் என்றும் பொருள் கொள்வர்

answered Dec 14, 2017 by premalatha (2,494 points)
...