• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சிம் கார்டுகளில் 16 கே அல்லது 64 கே எதை குறிக்கிறது

+2 votes
சிம் கார்டுகளில் 16 ‘கே’ என்று முன்பு குறிப்பிடுவார்கள். இப்போது 64 ‘கே’ என்று குறிப்பிடுகிறார்கள். இந்த கே எதை குறிக்கிறது?
asked May 29, 2013 in பொது by parthiban (15,490 points)
   

3 Answers

0 votes
இது உங்கள் சிம் கார்டுடின்  நினைவக அளவு கிலோபைட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.

16/32/64/128 கே சிம் கார்டுடின் நினைவக அளவு மற்றும் வேகத்தை குறிக்கும்.

128k சிம் உலாவல்(surfing) போது முழு 3G வேகம் அனுபவிக்க முடியும்.
answered May 29, 2013 by Chester (1,152 points)
0 votes
சிம் கார்டுகளில் ‘கே’, அதன் அளவைக் குறிக்கும் சொல்லாகும். ‘கே’ என்பது கிலோ பைட்டின் சுருக்கம். 16கே கொண்ட சிம் கார்டுகளில் 125 போன் நம்பர் அதன் பெயர்களை ஸ்டோர் செய்யலாம். அதே போல் 64கே என்றால் 500 நம்பர்களை ஸ்டோர் செய்துகொள்ளலாம். இந்த அளவுகளைப் பொறுத்துதான் எஸ்எம்எஸ்கள், போன் புக், செக்யூரிட்டி கீக்களை பயன்படுத்த முடியும். மேலும் இப்போது வரும் போன்களில் இவற்றை ஸ்டோர் செய்வதற்கு சிம் கார்டுகள் தவிர போன்களில் உள்ள மெமரிகள் மற்றும் தனியாக இணைத்து பயன்படுத்தும் ‘மெமரி கார்ட்’களிலும் ஸ்டோர் செய்யலாம். இதனால் இப்போது சிம் கார்டில் கொடுக்கப்படும் ‘கே’ அளவுகளை யாரும் பார்ப்பது இல்லை.
answered May 30, 2013 by stranger012 (4,170 points)
0 votes

மின்னணு துறையில் இருப்பவர்களுக்கு இது நன்றாகவே புரியும். நாம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் எல்லாவற்றிலும் உள்வாங்குதல், நினைவுபடுத்துதல், திட்டமிடுதல், கட்டுபடுத்துதல் மற்றும் வெளியிடுதல் என முக்கிய ஐந்து வேலைகளை செய்கின்றன. நினைவுபடுத்துதல், திட்டமிடுதல், கட்டுபடுத்துதல் இம்முன்றும் "மத்திய செயல்படுத்தி" என்று பெயர். இங்கு நாம் நமது மொழியில் கொடுக்கும் வேலைகளை இயந்திர மொழியில் (0 மற்றும் 1) மாற்றி நமக்கு தேவையான விவரங்களை மீண்டும் நமது மொழியில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடுகிறது. "0" என்பது off மற்றும் "1" என்பது on . எந்த ஒரு எழுத்தானாலும், எண் என்றாலும், குறியீடு என்றாலும், 8 BIT கொண்ட ஒரு BYTE. இது போல் ஓர் ஆயிரம் BYTE என்பது 1KB. பத்தாயிரம் BYTE என்பது ஒரு MB. புரிகிறதா நண்பரே.

answered Apr 22, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...