• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

இரும்பு எவ்வாறு துருபிடிக்கிறது

+2 votes
இரும்பு எவ்வாறு துருபிடிக்கிறது? மற்ற உலோகங்களும் துருப்பிடிக்குமா?
asked May 29, 2013 in எப்படி? by parthiban (15,490 points)
   

2 Answers

+1 vote
துரு(Rust) என்பது கூட்டுப்பொருள் (Chemical Compound) ஒன்றுக்கும் மேற்பட்ட தனிமங்களின் இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு  ஆகும்.
இரும்பானது நீர் மற்றும் ஆக்சிசனின் நிலவுகையின் போது துருப்பிடிக்கும்(கபில நிறம்).
சிலவகை துருவானது இரும்பு குளோரைட்டுடன் தாக்கமடையும் போது உருவாகும்(பச்சை நிறத்தில் காணப்படும்).

இரும்புத் துரு உருவாகும் வேதியற் தாக்கமானது அமிலம் அல்லது உப்புக்கள் நிலவுகையில் வேகமாக்கப்படும்.

 சுத்தமான நீருடனோ அல்லது ஈரப்பதமற்ற ஒக்சிசன் மாத்திரம் உள்ள போது இரும்பிலிருந்து துரு உருவாகாது.(இரண்டும் உள்ள போது இரும்பு துருப்பிடிக்கும்.)

தங்கத்தில் துரு பிடிப்பதில்லை.
answered May 29, 2013 by Chester (1,152 points)
+1 vote
ஒவ்வொரு பொருளும் இயற்கையில் வேறு வடிவத்தில் கிடைக்கிறது, குறிப்பாக உலோகங்கள் அதன் தாதுக்களாக தான் கிடைக்கிறது , இரும்புத்தாது, அலுமினியத்தாது , தாமிரத்தாது  போன்றவைகளாகும்.
இப்படி கிடைக்கும் தாதுக்களில் உலோகம் தனித்து இல்லாமல் அதன் ஆக்ஸைட் வடிவத்தில் இருக்கிறது. இப்படி இருக்கும் உலோகம் அதன் இயற்கை வடிவத்தில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்படுகிறது, இப்படி தனித்து எடுக்கப்படும் உலோகம் மீண்டும் அதன் இயற்கை வடிவதிற்க்கு மாறும் வேதியல் மாற்றம் தான் துருப்பிடித்தல்.
அலுமினியம் பாத்திரத்தில் அலுமினியம் ஆக்ஸைட் இயற்கையிலே படர்ந்து விடுவதால் அது மேலும் துருப்பிடிப்பதில்லை. நாம் வீடுகளில் பயன்படுத்தும் பூஜை பாத்திரங்கள் பித்தளையில் (அது தாமிரம் உலோகம் கலந்த கலவை) தாமிரம் இருப்பதால், அதில் காப்பர் ஆக்ஸைட் ஆக நம் கண்களுக்கு தெரியும் பச்சை நிறமாக படியும் படற்கையும் துரு தான்.
தங்கம் இயற்கையில் தனி தனிமம் ஆக கிடைக்கிறது, ஆதலால் அது ஆக்ஸைட் வடிவம் மாறாமல் துருப்பிடிக்காமல் இருக்கிறது.
answered May 30, 2013 by stranger012 (4,170 points)
...