ஆங்கிலதில் உள்ள தொழிற்நுட்ப/கணித/மருத்துவ சொற்களை, விதிகளை தமிழில் மாற்றி படிப்பது என்பது பலருக்கும் கஷ்டப்பட்டு புகுத்தப்படுவது போல் உள்ளது. மேலும் முக்கியமாக, இவை தமிழில் பரவலாக புழக்கத்தில் வேறு இல்லை. இந்த காரணங்களினால் ஆங்கிலத்தில் கையாளுவதே பலருக்கு எளிதாக இருக்கிறது. அதே சமயம் தமிழுக்கே உரித்தான இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் போன்றவற்றை ஆங்கிலத்தில் எளிமையாக படிக்க முடியுமா சொல்லுங்கள். தொண்ணூறு சதவிகிதம் மூலிகைகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் கூட இருக்காது. வாதம் பித்தம் என்பதற்கு கூட ஆங்கிலத்தில் சொல்ல வழி கிடையாது. ஒரு மொழிக்கு அந்நியமானவற்றை, புழக்கத்தில் இல்லாதவற்றை அம்மொழில் படிப்பது மிகவும் கஷ்டமே. நம் மொழிக்கு அந்நியமான பலவற்றை நம் வாழ்கை முறையில் கடைபிடிபதனாலும், அந்த விஷயங்கள் பெரிய அளவு நம் வாழ்க்கையை பற்றி வேரூன்றி விட்டதனாலும் அந்த விஷயகளுக்கு மிகவும் இயல்பாக பொருந்தும் மொழியே சுலபமாகவும், அந்த துறைகளில் முன்னேற ஏதுவாகவும் உள்ளது. இந்த துறைகளை ஆங்கிலத்தில் படிப்பது எளிதான பாதை. குறைந்த பட்சம் ஆங்கிலம் நம்மிடையே இல்லாது இருந்தால் தமிழிலேயே கற்க வேண்டி இருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் இது கிடைக்கும் போது எளிதான பாதையில் செல்லவே விரும்புகின்றனர்.