• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்?

+2 votes
டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் மாற்றினால் என்னவாகும்?
asked Jun 13, 2013 in பொது by parthiban (15,490 points)
   

3 Answers

+2 votes
இன்ஜின் சிஸ் ஆகிவிடும் (engine sieze)
answered Jun 13, 2013 by தமிழன் (6,854 points)
+3 votes
பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடிய குறைந்த வெப்பநிலையில் தீப்பற்றிக்  கொள்ளும்  எரிபொருள் ஆகும்.  பெட்ரோல்  எஞ்சினில் கார்புரோட்டல்  மூலம்  ஆவியாக்கப்பட்ட  பெட்ரோல்  ஆவியும்  காற்றுக் கலவையும் உள்ளிழுக்கப்படுகின்றன. இங்கு அவை 6  முதல் 8  மடங்கு அழுத்தப்பட்டு ஒரு மின்பொறியால் எரிக்கப்படுகிறது. இதனால்  விசை உண்டாகிறது.

டீசல் எஞ்சினில் கார்புரேட்டரும் மின்பொறி உருவாக்கியும் கிடையாது. டீசல் சாதாரண வெப்பநிலையில் எளிதில் ஆவியாவதில்லை. எஞ்சினால் காற்று மட்டுமே உள்ளிழுக்கப்படுகிறது. இந்த காற்று 4 முதல் 24 மடங்கு அழுத்தப்படுகிறது. இதன்மூலம் காற்றின் வெப்பநிலை மிக அதிக அளவிற்கு உயர்த்தப்படுகிறது. இவ்வாறு வெப்பமடைந்த காற்றினுள் இஞ்செக்டர் மூலம் டீசல் தெளிக்கப்படுகிறது. அப்போது அது உடனே தீப்பற்றி எரிந்து விசையை உண்டாக்குகிறது. இத்தகைய டீசல் எஞ்சினினுள் பெட்ரோல் போட்டால் அதிக வெப்பமுள்ள காற்றுடன் சேரும்போது திடீரென வெடிக்கவும் செய்யலாம். பெட்ரோல் டீசலை விட அடர்த்தி கம்மியானது. இதன் உயவூட்டு தன்மை டீசல் எஞ்சினுக்கு ஏற்றதல்ல. இதனால் உராய்வு அதிகம் ஏற்பட்டு வண்டி சீஜ் ஆகும். புது மாடல் டீசல் எஞ்சின்கள் என்றால் ரிப்பேர் செய்ய மிகுந்த செலவு ஆகும். டீசல் எஞ்சினில் பெட்ரோல் போட்டது தெரிந்தால் என்ஜினை ஸ்டார்ட் கூட செய்யாது உடனே மெகானிக்கை அழைக்கவும். மேற்சொன்ன காரணங்களால்  டீசல் வாகனத்தில் பெட்ரோலையும், பெட்ரோல் வாகனத்தில் டீசலையும் போடக்கூடாது.
answered Jun 13, 2013 by stranger012 (4,170 points)
edited Jun 13, 2013 by rradhac
+2 votes
பெட்ரோல் வாகனத்தில் டீசல் போடும் போது அடைப்பு ஏற்படும் ஏனெனில் பெட்ரோல் எளிதில் ஆவியாகி தீ பற்றக் கூடியது அப்படி பார்க்கும் போது டீசல் ஒரு திடப் பொருள் ஒரு சமயம் இஞ்சின் பழுதாகும் நிலைகூட ஏற்படலாம் இதை சோதிக்கும் திறன் எந்த கார் உரிமையாளருக்கும் இருக்காது இதெல்லாம் மெக்கானிக் சொன்ன தகவலே
answered Jun 14, 2013 by piramanayagam (122 points)
...