• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கடவுள் உண்டா இல்லையா? தங்கள் கருத்து?

+2 votes
என்னை பொறுத்த வரை நம் மேல் வைத்த நம்பிக்கையும் மற்றவர்கள் மேல் வைக்கும் அன்பும் கடவுள்.. ஆக கடவுள்  உண்டு...
asked Jun 20, 2013 in ஏன்? by BlitzkriegKK (6,860 points)
   

6 Answers

+2 votes
கடவுள் இருந்தாலும் இல்லையென்றாலும் உங்கள் வேலையை நீங்கள்தான் செய்தாக வேண்டும்.

கடவுள் இல்லையென்று சொல்லவில்லை... இருந்தால் நன்றாக தான் இருக்கும்...
answered Jun 21, 2013 by parthiban (15,490 points)
+1 vote
நல்ல குணம் படைத்த அணைத்து ஜீவராசிகளுமே கடவுள் தான்
answered Jun 21, 2013 by தமிழன் (6,854 points)
0 votes
வேலை வாழ்க்கை இதற்கெல்லாம் நான் செல்லவில்லை.. கடவுள் உண்டா இல்லையா?
answered Jun 21, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes
இருக்கு ஆனா இல்லை ..இருக்கலாம் அனால் இல்லாமையும் இருக்கலாம் .
answered Jun 26, 2013 by Ramesh Rambi (3,496 points)
+1 vote

எங்கள் பேராசிரியர் வகுப்பறையில் பர்கிர்ந்துகொண்ட ஒரு விஷயத்தை இவ் வலைத்தளத்தில் பகிர நன் விரும்புகிறேன்.
பல அறிஜர்கள் ஏற்றுகொண்ட ஒரு பலமான கருத்து "fluid dynamics" என்ற பாடப் பிரிவில் ஓடும் நீரின் வேகத்தை கணக்கிட கண்டுபிடித்த ஒரு விதியினை பலர் எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்றுகொண்டனர் .அவ்விதியாவது "ஓடும் நீரில் ஒதொனும் ஒரு புள்ளியில் "source" என்பதனை உருவாக்கவேண்டும் அதனை இடு செய்ய மற்றொரு புள்ளியில் "sink" என்பதனை உருவாக்க வேண்டும் .இவ்விரு விஷயங்களை கொண்டு நீரின் பல பண்புகளை நாம் கணக்கிடலாம்.ஆற்றலை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்று சிறு வயதில் படித்த விதிக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கருத்தை ஆட்சேபனை இன்றி ஏற்ற நாம்!!! எல்லாவற்றையும் ஆக்கவும் , அழிக்கவும் ஒரு சக்தி உள்ளது என்பதை பலமாக மறுக்கிறோம்.
கடவுள் என்ற ஒரு கருத்தை மனிதன் ஏற்படுத்தியதற்கு காரணம் மனிதன் தன் வாழ்வில் தவறுகள் செய்யாமல் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று,கடவுளையே எண்ணி நேரத்தை செலவு செய்பவனும் முட்டாள் ,கடவுள் இல்லை என்று விவாதித்து நேரம் செலவிடுபவனும் முட்டாள் அந்த பொன்னான நேரத்தை அவனும் அவனை சுற்றயுள்ளவர்களும் முன்னேற செலவிடுபவேனே புத்திசாலி இனி நீங்களே முடிவேடுதுகொளுங்கள் ,நீங்கள் யார் என்று ???????

answered Sep 20, 2013 by pavithrayashika (64 points)
0 votes

இந்த கேள்விக்கு எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது நண்பர்களே.
ஒரு ஊரில் பருவத்திற்கு பெய்ய வேண்டிய மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் கடவுளிடம் மழை பெய்விக்க பல பூஜைகள் செய்தனர். காணிக்கை செலுத்துவதாகவும் வேண்டினர். அந்த ஊரில் பாதிரியார் கனவில் கடவுள் தோன்றி, "மக்கள் பல பாவங்கள் செய்து வருவதாகவும், பாவத்திற்கு பரிகாரங்கள் செய்து தீர்த்துக்கொள்வதாகவும், யாரும் திருந்தி வாழ நினைப்பதில்லை என்றும் இது அவர்களுக்கு புரிய வைப்பதற்காக" என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். பாதிரியார் கனவில் கண்டதை மக்களுக்கு தெரியபடுத்தி மக்களை திருந்தி வாழும்படி கேட்டுக்கொண்டார். மக்கள் பாதிரியாரை தூற்றினர். ஊரை விட்டு வெளியேறும்படி முடிவெடுத்தனர். பாதிரியாரோ, திடீரென்று மக்கள் எடுத்த முடிவை ஏற்றுக்கொண்டாலும் நாளை காலை வரை அவகாசம் கேட்டுக்கொண்டார். அன்று மாலை சிறு தூறல் போட ஆரம்பித்த வானம் மழை விடாமல் பெய்துக்கொண்டிருந்தது. மழை வந்த மகிழ்ச்சியில் மக்கள் இருக்க சாலை ஓரம் ஓடிக்கொண்டிருந்த மழை நீர் சாலை முழுவதும் ஓடி வீட்டு வாசல் வரை வந்து வீட்டுக்குள்ளும் வரும் அளவுக்கு விடாமல் அடை மழையாக பெய்துக்கொண்டிருந்தது. மக்கள் படும் அவதியை பார்த்த பாதிரியார் அனைவரையும் பெரிய மண்டப வளாகத்தில் தங்கவைத்து உதவிகளை செய்தார். மக்களின் மனம் பாதிரியார் செயலை ஏற்றுக்கொண்டாலும் மழை விட்டபின் அவரை ஊரை விட்டு துரத்த வேண்டும் என்று நினதுகொண்டனர். இரண்டு நாட்களாகியும் மழை விட்டபாடில்லை. அன்றிரவு கடவுளை நினைத்தபடி உறங்கிவிட்ட பாதிரியாரின் கனவில் மீண்டும் கடவுள் தோன்றி, பாவம் செய்தவன் யாரும் தப்பிக்க இயலாது. மரணம் நிச்சயம்." என்றும் பாவிகள் ஒழிந்தால் மட்டுமே மழை நிற்கும்" என்றும் சொல்ல பாவிகள் ஒழிய நல்லவர்களும் துன்பப்பட வேண்டுமா? கருணை காட்ட கூடாதா என்று வேண்டினார். கடவுள், " அப்படியென்றால் மண்டப முன்புறம் இருக்கும் ஆலமரத்திற்கு எவன் ஒருவன் வந்து திரும்புகிரானோ அவன் இவ்வுலகில் வாழ தகுதி உள்ளவன். நாளை காலை காத்திருக்கும் இடி அம்மரத்தின் மீது விழும். பிறகு மழை நிற்கும். என்று கூறிவிட்டு மறைந்தார். பாதிரியாரோ இதை மக்களிடத்தில் சொல்ல பயந்திருந்தார். ஏற்க்கனவே மக்களின் முடிவு இப்படி இருக்க, என்ன செய்வது அறியாது யோசிதுக்கொண்டிருந்தார். மழை விடாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. மண்டபத்தை சுற்றிலும் மழை நீர் தேங்க ஆரம்பித்தது. வேறு வழியின்றி, பாதிரியார் "எது நடந்தாலும் எல்லாம் அவன் செயல்" என்று மக்களை பார்த்து, நம்மில் ஒருவர் பாவத்தை சுமந்திருப்பதால் மழை நிற்காது. கடவுள் தன கனவில் சொன்னதை சொல்லி முடிக்கையில் பாதிரியாரை ஒரு சிலர் தாக்குவதற்கு முற்பட்டனர். ஒரு சிலர் அவர் தாக்கப்படாமல் தடுத்தனர். "எப்படியும் இந்த ஊரை விட்டு செல்லவேண்டியவர் மழையால் இங்கேயே இருக்கவேண்டியதாயிற்று. மழை விட்டதும் சென்றுவிடுவார். அவர் சொன்னதை செய்து பார்க்கலாம்." என்று சமாதானத்திற்கு பிறகு ஒருவர் பின் ஒருவராக ஆலமரத்தை நோக்கி சென்று மீண்டும் மண்டபம் வந்தனர். பாதிரியார் ஒருவரை தவிர மற்ற எல்லோரும் ஆலமரம் வரை சென்று வந்துவிட்டனர். இடி விழுந்தபாடில்லை. மக்கள் பாதிரியாரை துற்றினர். பாவம் செய்தவன் இவன் ஒருவனே, என்று பாதிரியாரையும், ஆலமரம் வரை சென்று வரும்படி சத்தம் போட்டனர். எல்லாவற்றையும் ஒப்புக்கொண்ட பாதிரியார், ஆலமரம் அடைந்ததும் காத்துகொண்டிருந்த இடி விழுந்தது. ஆலமரத்தின் மீது அல்ல. மண்டபம் மீது. நன்றி.

answered Jan 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...