• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஒரு தொடர்கதை சொல்லலாமா? ஒவ்வொருவரும் ஒரு பத்தி எழுதினால் போதும்..

+5 votes
பல வருடங்களாக வேலைக்கு அலைந்து  இன்று எதோ ஒரு அலுவலகத்தில் சிரம வருமானத்தில் இருக்கும் நம் கதையின் நாயகன் ....
asked Jun 21, 2013 in புனைவு கதைகள் by BlitzkriegKK (6,860 points) 1 flag
recategorized Jun 21, 2013 by rradhac
   

7 Answers

+2 votes
காலை நாளிதழைப் பார்த்தும் அருணுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி ஏதோ அவனுக்கு விருது கிடைத்ததைப்போல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் உடனே தன் மனைவியை அழைத்தான் உடனே கிளம்பு என்று சொன்னவன் சில நண்பர்களுக்கும் கூப்பிட்டு சொன்னான்
answered Jun 21, 2013 by piramanayagam (122 points)
+4 votes
"டேய் சிங்கம். பேப்பர இன்னிக்கு பாத்தியாடா? "ஒரு கோடி இந்தா பிடி" ப்ரோக்ராம் நம்ம ஊர்லையே எடுக்க போறாங்களாம். நான் கலந்துகலான்னு இருக்கேன். நீங்கல்லாம் வந்துடுங்க. முரளிய மட்டும் போன் கிட்ட இருக்க சொல்லலாம். அவன் தான் அதுக்கு கரெக்டு. 'சென்னைல இருக்கற கடல் என்னன்னா' அதுக்கே பதில் தெரியாத ஆடியன்ஸ் வோட்டு போயிடறானுங்க." என்று போன் பிடித்துக்கொண்டே மேலும் கீழும் குதித்துகொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த செல்விக்கு சிரிப்பாக இருந்தது. இருந்தாலும் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் சூர்யா ஜோதிகாவை அழைத்துவருவதாக போட்டிருந்ததால் இந்த சாக்கில் அவர்களை பார்க்கலாம் என்ற ஆர்வம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமானது. முதல் ரவுண்டுக்கு கூட தேர்வாவது கஷ்டம் என்று தோன்றியது. கூட்டம் முண்டி அடிக்காது? அப்படியே போட்டிக்கு தேர்வான நம்மள டி வி ல காமிப்பாங்க. என்ன புடவை கட்டலாம் என்று யோசிக்க ஆரமித்துவிட்டாள்.
answered Jun 22, 2013 by bookworm (4,420 points)
+3 votes
செல்வி அருணிடம் கேட்டாள்,"என்னங்க, ஜோதிகா, சேலை விளம்பரத்துல கட்டிய பட்டு சேலை வாங்கி தரீங்களா ?".அருண் செல்வியை முறைத்தபடி,"நீ எங்க வரேன்னு எனக்கு தெரியும், நான் உன்னை நிகழிச்சிக்கு அழைத்து போவதாக இல்லை, பிறகெதற்கு புது புடவை?" என்றான் .அதை கேட்டு செல்வியின் முகம் சுருங்கியது.அவளுக்கு அருணை பற்றி நன்றாக தெரியும். அவனை பொறுத்த வரையில், செல்வி ராசி இல்லாதவள். அதனால் அவளை எந்த ஒரு நல்ல காரியதிருக்கும், அவன் உடன் அழத்து செல்வதே இல்லை.செல்வி தன்னை தானே மனசுக்குள் திட்டி தீர்த்தாள்."அடி அசடே , ஒவ்வொரு தடவையும் ஏன் இப்படி எதிர் பார்த்து ஏமாந்து போரே, அவர் தான் உன்னை மதிக்கறதே இல்லையே!!! உனக்கு ஒரு முறை  சொன்னால்  புரியாதா?" செல்வியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.அவள் நினைவுகள் ஐந்து வருடங்கள் பின் நோக்கி சென்றன.அன்றைய தினம், அவள் அருண் ஆபீசிலிருந்து வருவதை எதிர் பார்த்து கொண்டிருந்தாள்.அன்றைக்கு அருணின் திருமணதிற்கு பிறகான முதல் பிறந்த நாள். அவனுக்காக அவள் ஒரு பரிசுடன் காத்திருந்தாள். அப்போது போன் அடித்தது.
answered Jun 22, 2013 by Rad Rags (162 points)
+1 vote
எனவே மிக தீவிரமாக வெகு நேரமாக யோசித்து கொண்டே இருந்தவள சட்டென ஒரு முடிவு எடுத்தவளாக நேரே அலமாரிக்கு சென்று 2வது வரிசையில் 3வது புடவையை எடுத்தாள். மிக அழகான புடவை அது. இருவரின் முதல் திருமண நாள் அன்று அருண் ஆசை ஆசையாக எடுத்துக்கொடுத்ததல்லவா ? புடவையை பிரிக்கும் போது தான் கவனித்தாள். அதன் முந்தானை  பகுதியில் ஒரு ராட்டஸ் ராட்டஸ் அதுதான் நம் எலி அண்ணா மூக்கால் முத்தமிட்டு கடித்து கிழித்து தன பற்களை பதப்படுத்தி இ ருந்தார். ஒரு புறம் சேலை கிழிந்த கவலை. இன்னொரு புறம் தன் கணவர் தனக்காக மிகவும் பிரியப்பட்டு எடுத்த சேலை கிழிந்துவிட்டதே என்ன ஆகுமோ என்று அச்சமும் அதிகம் ஆனது. அப்போது அந்த அறைக்குள்...
answered Jun 24, 2013 by BlitzkriegKK (6,860 points)
+1 vote
செல்வி அச்சத்துடன் அந்த அறைக்குள்  நின்று கொண்டு இருக்கும் பொது . தன் கணவன் நிற்பதை அறிகிறாள் .ஒரு பயத்துடன் பக்கம் சென்று புடவைவைக்கு நடந்த விபரிதத்தை சொல்ல ஆரம்பிக்கும் பொது .கணவனிடம் ஒரு இன்ப அதிர்ச்சி . அருண் பிறந்த நாள் பரிசாக அவளுக்கு பிடித்த நிறத்தில் புடவை வாங்கி வருகிறான் .செல்வி மிக சந்தோசத்துடன் கணவன் வாங்கி வந்த புடவையை அணிந்து வெளியே கிளம்புகிறார்கள் .அப்போது செல்வி வீட்டின் படியில் நடக்கும் பொது கால் தடுமாறுகிறார் .தூக்கம் கலைகிறது .ஏமாற்றத்துடன் கண் விழுக்கிறாள் .அரைகுள் கணவன் நுழைகிறான்....
answered Jun 25, 2013 by தமிழன் (6,854 points)
edited Jun 25, 2013 by தமிழன்
+2 votes
செல்வி கேட்டால்,"அருண், ஏன் இவ்வளவு டயர்டாக வரீங்க, ஆபீசில் ரொம்ப பிஸியா?". தலை குனிந்த அருண் செல்வியை நிமிரிந்து பார்த்தான்.அவன் கண்களில் நீரை பார்த்து செல்வி பதறினாள்."என்ன ஆச்சு? ஏன் கண் கலங்கறீங்க? சொல்லுங்க , என்ன ஆச்சு?". அருண் கண்களை துடைத்த படி கேட்டான்,"செல்வி , ஏன் மதியம் போன் எடுக்கவே இல்லை?நான் எவ்வளவு முறை ட்ரை பண்ணினேன்னு தெரியுமா? ஊர்ல எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஆபீஸ் லீவ் சொல்லி விட்டு பஸ் ஸ்டாண்டுக்கு பொய், இன்றிரவு ," அம்மா உடம்புக்கு என்ன ஆச்சு? நேற்றைக்கு கூட போன் செய்தாங்களே? நீங்க போன் செஞ்ச 3 தடவையும் நான் கிட்செனில் வேலையாக இருந்தேன், வந்து எடுப்பதற்குள் நின்று விட்டது. "அப்போது போன் மணி அடித்தது.செல்வி போனை எடுத்தால், மறு முனையில் அவள் மாமனார் அழும் குரல் கேட்டது.அவளுக்கு ஹலோஎன்று சொல்வதற்கு கூட பயமாக இருந்தது. போனை அருணிடம் நீட்டினாள்.
answered Jun 25, 2013 by Rad Rags (162 points)
+2 votes
அருணிடம் அவன் தந்தை,அம்மாவிற்கு இதயத்தில் தடை இருப்பதாகவும் , உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார். அருணிற்கு கை காலெல்லாம் வியர்த்து போனது.செல்வியிடம் விஷயத்தை தெரிவித்தான்.பிறகு கொஞ்சம் யோசித்தான். செல்விக்கு புரிந்துவிட்டது. தான் ராசி இல்லாதவள் என்ற ஒரு கருத்தையே அவள் மாமியார் தான் அருணிடம் கூறி அவனை நம்ப வைத்திருக்கிறாள்.இப்பொழுது இந்த ஆபரேஷன்க்கு செல்வியை அழைத்து சென்றால் என்ன ஆகுமோ என்ற பதட்டம் அவனுக்கு இருந்தது. ஆனால் அவளை கூட்டி சென்றால் தன் அப்பாவிற்கும் அவனுக்கும் பக்க பலமாக இருப்பாள் என்றும் உணர்ந்தான்.
answered Jun 26, 2013 by itzsuj (1,090 points)
...