• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

பழமொழி

0 votes

பழமொழிகள் கேட்டு ரசித்து ரொம்ப நாள் ஆயிடிச்சு. உங்களுக்கு தெரிந்த பழமொழிகள்?

asked Jul 1, 2013 in பொது by bookworm (4,420 points)
   

4 Answers

0 votes

இந்த நாட்டில் நோயால் செத்தவனை விட வாயால் செத்தவனே அதிகம்..

answered Jul 2, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes

1.எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
2.எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

answered Jul 2, 2013 by தமிழன் (6,854 points)
0 votes
  1. ஆறு வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி.

  2. தாயும் பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறு தான்.

  3. தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை.

  4. அடியாது மாடு படியாது.

  5. வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது.

  6. விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

  7. விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

  8. மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

  9. மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?

  10. பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்.

  11. புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

answered Jul 2, 2013 by anjvelu (3,018 points)
0 votes

மானுக்கு ஒரு புள்ளி கூடினால் என்ன, குறைந்தால் என்ன?
பதறிய காரியம் சிதறும்.
மயிலே மயிலே என்றல் இறகு போடாது.
நாய் வேடம் போட்டால் குறைத்து தான் ஆகவேண்டும்.

answered Jun 2, 2014 by PRamachandran (308 points)
...