• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சென்னை பீச் - அபாயமானதா?

+1 vote

சென்னை பீச் - அபாயமானதா? இன்று 4-5 போலிஸ்காரர்கள் குதிரை மேல் வந்து எல்லாரையும் தண்ணீருக்குள் இருந்து விரட்டிகொண்டிருந்தனர். சும்மா ஒரு சில அடிகள் தண்ணீருக்குள் இருப்பதை கூட அனுமதிக்கவில்லை. (நம் ஆட்கள் கேட்டபாடில்லை என்பது வேற விஷயம்). சுழல் இருக்கு என்றால் எங்க இருக்கு? மாறிக்கிட்டே எங்க வேணா இருக்குமா? நம்ம பீச் மட்டும் ரொம்ப மோசமா? எந்த எடத்துல இறங்க கூடாது - புரியமாட்டேன்குது

asked Jul 14, 2013 in கடற்க்கரை by bookworm (4,420 points)
   

1 Answer

0 votes

உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்து வருகிறது. இவ்வளவு அழகான கடற்கரையில், சந்தோஷம், நிம்மதி தேடி வருபவர்களை மிரட்டி பணம் பறித்தும், தாக்கி வழிப்பறி செய்தும் வருகின்றனர் சில ரவுடிகள். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் மெரினா அழகை ரசிக்க வேண்டியிருக்கிறது. பெங்களூர் இன்ஜினியரையும் அவரது மனைவியையும் தாக்கி பர்ஸ், கைப்பையை பறித்து சென்றுள்ளனர் ரவுடிகள்.

பெங்களூர் சிவாஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். கம்ப்யூட்டர் இன்ஜினியர். இவர் குடும்பத்துடன் சென்னைக்கு சுற்றுலா வந்தார். காலை 11 மணியளவில் மெரினா பீச்சுக்கு வந்தனர். கடற்கரை மணலில் பெட்ஷீட் விரித்து ராஜேஷின் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தனர். ராஜேஷ் பேன்ட், சட்டையை கழற்றி வைத்துவிட்டு கடலில் குளிக்க சென்றார். குழந்தைகளும் குளிக்க ஆசைப்பட்டன. அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் ராஜேஷ் கழற்றி வைத்திருந்த பேன்ட் மற்றும் அவரது மனைவியின் கைப்பையை எடுத்தனர். திடுக்கிட்ட ராஜேஷும் அவரது மனைவியும் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர். அந்த வாலிபர்கள் திடீரென தம்பதியை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேன்ட், கைப்பையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கடற்கரையில் இருந்தவர்கள், வாலிபர்களை விரட்டிச் சென்றனர். ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றொருவர் பேன்ட் மற்றும் கைப்பையுடன் மாயமானார். அதில் செல்போன், ரூ.4 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது. மெரினா கடற்கரை போலீசார் பிடிபட்ட வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

answered Jul 19, 2013 by parthiban (15,490 points)
...