• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வானம் நீல நிறமாக இருப்பதற்கு என்ன காரணம்? இதைக் கண்டறிந்தவர் யார்?

+1 vote
asked Apr 18, 2013 in பொது by Ramesh Rambi (3,496 points)
   

2 Answers

0 votes
எப்பொழுதும் வானம் நீல நிறமாகவே தெரியும். இது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் வானம் நீல நிறமாக இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியுமா?

ஒரு வெள்ளை நிறக் கதிரானது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என ஏழு வகையான கதிர்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு கதிருக்கும் வெவ்வேறு அலை நீளமும் அதிர்வெண்ணும் உண்டு. சூரியக்கதிர்கள் அண்டத்தில் நேர்க் கோட்டில் பயணிக்கும். அப்படிப் பயணிக்கும் போது ஒரு மூலக் கூற்றையோ தூசியையோ எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? அத்தூசியின் தன்மையைப் பொறுத்து கதிர்களின் செயல்பாடு மாறுபடுகிறது.

சூரியக் கதிர்கள் நம் காற்று மண்டலத்தின் தூசித்துகள்கள் மீது மோதும் பொழுது அவை பெரும்பாலும் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் வெள்ளை நிறத்திலேயே தோற்றமளிக்கும்.

இதற்குக் காரணம் தூசித் துகள்கள் கதிர்களை உட்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றன. எனவே கதிர்கள் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன.

ஆனால் காற்று மூலக்கூறுகள் மீது மோதும் பொழுது இதற்கு நேர்மாறாகக் காற்று மூலக்கூறுகள் அதில் பெரும்பான்மையான கதிர்களை உட்கொள்கின்றன. இதில் அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள் (சிவப்பு) தப்பிப் போய் விடுகின்றன. ஆனால் குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களை (நீலம்) காற்று மூலக்கூறுகள் விடாமல் உட்கொள்கின்றன. இவ்வாறு உட்கொள்ளப்பட்ட நீல நிறம் கதிர் வீச்சடைந்து பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இதனால்தான் நமக்கு வானம் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது.

இதை 1859 இல் ஜான் டின்டால் என்பவர் கண்டுபிடித்தார்.
answered Apr 24, 2013 by parthiban (15,490 points)
0 votes

sir C.V.Raman

answered Nov 5, 2013 by gopal (2,084 points)
...