• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மீச்சிறு கதை சொல்லலாமா?

+5 votes

கதைக்கு தலைப்பு வேண்டும்.. அதிகபட்சம் 3 வரிகள் போதும்.. தலைப்பிலேயே கதையை கூறிவிட்டால் சாமர்த்தியம்.. கதை பேசலாமா?

asked Jul 25, 2013 in புனைவு கதைகள் by BlitzkriegKK (6,860 points)
   

19 Answers

+3 votes

விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு 50 ருபாய் கிழ இருந்து கிடைக்கிறது ..எடுத்த சிறுவனுக்கு என்ன வாங்கலாம் என்று சிந்தனையில் ஒவ்வொன்றாக தோன்றியது சாலை ஓர கடைகளை பார்த்து கொண்டே செல்கிறான் ..ரோடு ஓரத்தில் ஒரு பிச்சைக்காரன் சாப்பிட்டு இருந்த சாப்பாட்டில் சேரை அடித்து செல்லும் கார் .பரிதாபத்துடன் பிச்சைகாரனை பார்க்கும் சிறுவன் பையில் இருந்த 50 ருபாய் வைத்து சாப்பாடு வாங்கிகொடுக்கிறான் பிச்சைகாரனுக்கு ..பின்பு ஒரு புன்னகை உடன் துள்ளி செல்கிறான் ..

தலைப்பு : சிறுவனின் சந்தோசம்

answered Jul 25, 2013 by தமிழன் (6,854 points)
+1 vote

ப்ளேனுக்குள் பாம்புகள்...


பி.கு. இது ஒரு ஆங்கில படம் 'snakes on a plane '....
தலைப்பிலேயே கதை இருக்குனு படம் வரும் முன்னாடியே கேலிக்கு உள்ளான படம்...


நீங்க ஒரு உதாரணம் குடுங்க - follow பண்றோம்...

answered Jul 25, 2013 by bookworm (4,420 points)
+2 votes

தலைப்பு: சிரிப்பொலி கேட்டது...

கதை: உலகின் கடைசி மனிதனுக்கு..

answered Jul 25, 2013 by BlitzkriegKK (6,860 points)
+3 votes

தலைப்பு: கையை எடுங்க...

கதை: வசந்திக்கு வேலைக்காரியின் குரல் தெளிவாக கேட்டது..

answered Jul 25, 2013 by BlitzkriegKK (6,860 points)
+1 vote

தலைப்பு : பண கஷ்டம் .
கதை : வெள்ளை காகிதத்தில் குழந்தையின் கிறுக்கல்...

answered Jul 25, 2013 by Pradhi (1,854 points)
+2 votes

தலைப்பு : தனியா பேசலாமா ??
கதை : கடைசி வரை தனியாகவே பேசிக்கொண்டு இருந்தான் அவன் மட்டும்...

answered Jul 25, 2013 by Pradhi (1,854 points)
+3 votes

தலைப்பு: இன்று மின் வெட்டு....

கதை: கொட்டும் மழையில் அவசர அவசரமாக வந்து கொண்டிருந்த வசந்தி, ரோடு திரும்புகையில், அறுபட்டு விழுந்திருந்த மின் கம்பியின் மேல் கால் வைத்தாள்...

answered Jul 25, 2013 by bookworm (4,420 points)
+3 votes

தலைப்பு: நிழலைத் தேடி

கதை: மரம்வெட்டி...

answered Jul 29, 2013 by BlitzkriegKK (6,860 points)
+2 votes

தலைப்பு: எச்சில் கையால் காக்கை விரட்டாதவன் கருமாதி:

கதை: காகங்களை காணவில்லை..

answered Jul 29, 2013 by BlitzkriegKK (6,860 points)
+3 votes

அந்நியனின் பாதிப்பா bookworm ..

answered Jul 29, 2013 by BlitzkriegKK (6,860 points)
+1 vote

தலைப்பு: கைபேசி
கதை: கடைவீதியில் குழந்தையை காணவில்லை...

answered Jul 29, 2013 by stranger012 (4,170 points)
+1 vote

தலைப்பு: கிரிக்கேட்
கதை: பாபு தந்தையிடம் மதிப்பெண் பட்டியலை நீட்டினான்...

answered Jul 29, 2013 by parthiban (15,490 points)
+1 vote

தலைப்பு: மனைவி
கதை: உண்ணாமல் உறங்கினால் வீட்டு வாசலில் தாய்...

answered Jul 29, 2013 by parthiban (15,490 points)
+2 votes

முன்பு கூறியது போல தலைப்பிலேயே பாதி கதை வந்துவிட்டால் இது மிக சுலபமே. ஒரு திருப்புமுனை இருப்பின் கதை முழுமை பெறும். அதே சமயம் ஹைக்கூ போல மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. வாசிக்கும் அனைவரும் அவர்களாகவே ஒரு கதையை கற்பனை செய்து கொள்ளும்படி நிர்பந்திக்ககூடாது. மேலும் இவை போன்ற கதைகள் சுருங்க பேசி விளங்க வைக்கும் கலையை நமக்கு கற்று தரும்..

answered Jul 31, 2013 by BlitzkriegKK (6,860 points)
edited Jul 31, 2013 by BlitzkriegKK
+2 votes

தலைப்பு: கிரிக்கெட் பார்க்கும் தந்தை..

கதை: மெதுவாக மதிப்பெண் பட்டியலை நீட்டினான் பாபு...

இப்படி கூட எழுதலாம்.. என்னை போன்ற சிறுபிள்ளைகளுக்கு புரியும்..

answered Aug 1, 2013 by BlitzkriegKK (6,860 points)
...