• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மீச்சிறு கதை சொல்லலாமா?

+5 votes

கதைக்கு தலைப்பு வேண்டும்.. அதிகபட்சம் 3 வரிகள் போதும்.. தலைப்பிலேயே கதையை கூறிவிட்டால் சாமர்த்தியம்.. கதை பேசலாமா?

asked Jul 25, 2013 in புனைவு கதைகள் by BlitzkriegKK (6,860 points)
   

19 Answers

+1 vote

தலைப்பு: ஆப்பிள் மரம்

கதை: டாம், ஜான் போன்றவர்கள் ஜாம் போட ஆப்பிள் எடுத்துசென்ற அடுத்த நாள், நியூட்டன் அந்த மரத்து அருகில் வந்தார்.

answered Aug 1, 2013 by bookworm (4,420 points)
+2 votes

தலைப்பு : லஞ்ச ஒழிப்பு ..
கதை : லஞ்ச ஒழிப்பு தியாகி , நின்று கொண்டிருந்தான் நியாயவிலை கடையில், அவன் வாக்களிததறக்காக அரசு வழங்கும் இலவச மின்விசிறி , தொலைகாட்சி வாங்க.. .

answered Aug 4, 2013 by Pradhi (1,854 points)
0 votes

தலைப்பு:அவள் பார்த்தாள்

கதை: அவனும் பார்த்தான்..

answered Oct 10, 2013 by BlitzkriegKK (6,860 points)
+1 vote

கொலை...

சுந்தரம் காவல் துறைக்கு முதலில் தகவல் கூறினான்..
கைதான சுந்தரம் வண்டியில் ஏறினான்.
காவல் ஆய்வாளரின் சட்டைப்பை கனமானது..

answered Oct 10, 2013 by BlitzkriegKK (6,860 points)
...