• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

குட்டி கதை பேசுவோமா?

+4 votes

3 வரி.. மூன்றே வரிகள்.. மகிழ்ச்சி கோபம் திகில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். புரிய வேண்டும்... மீச்சிறு கதை கேள்விக்கான பதில்களை பார்த்ததும் இந்த விஷயத்திற்கு இங்கு பல பேர் உண்டு என தெரிகிறது.. ஆரம்பிப்போமா?

asked Aug 1, 2013 in புனைவு கதைகள் by BlitzkriegKK (6,860 points)
   

3 Answers

+4 votes

தலைப்பு: கண்ணீரில் கரையும் பஞ்சுமிட்டாய்..
கதை:
பஞ்சுமிட்டாய் விற்ற சிறுவன் சாலையில் விபத்துக்குள்ளானான் .. வேலைக்கு அனுப்பி வைத்த சமூகம் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது..

இதையே ஹைக்கூ பாணியில் சொல்லலாம்.

பஞ்சு மிட்டாய் விற்ற சிறுவன்
பலியானான் சாலையில்.
வேடிக்கை பார்த்தன பிணங்கள்.

answered Aug 5, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes

தலைப்பு : ஏழையின் குடை

கதை : அட மலையில் நனைந்து கொண்டு இருக்கும் மூதாட்டி ...உதவுகிறது ஏழையின் குடை ..

answered Aug 9, 2013 by Ramesh Rambi (3,496 points)
0 votes

குடியும் குடிமகனும்.

அம்மாவிடம் குழ்ந்தை கேட்டான்.
"அம்மா, பசிக்கிறது. சோறு வேணும்."
அம்மா சொன்னார்.
"அப்பா வந்திடுவார், சோறு செஞ்சி சாப்பிடலாம்"
பசியுடன் குழ்ந்தை தூங்கி விட்டான். அப்பாவை தாங்கியவாறு இருபுறமும் இருவர் வீட்டு வாசலில் குரல்கொடுக்க, அப்பா போதையில் நின்றிந்தார்.
பாவம் அந்த பிள்ளை.

answered Apr 11, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...