• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

"இந்திய வருமான வரித்துறை" இதன் செயல்பாடுகள் என்னன்னா ?

+4 votes
asked Aug 21, 2013 in பொது by anjvelu (3,018 points)
   

1 Answer

0 votes

இந்திய அரசின் வரிகள் பலவனவாக இருந்தாலும் அவற்றை இரண்டு வகைகளுக்குள் அடக்கி விடலாம். ஒன்று நேரடி வரி (Direct Tax) அடுத்தது மறைமுக வரி (Indirect tax). இதில் வருமான வரி என்பது நேரடி வரி என்ற வகையில் அடங்கும். ஏனெனில் இது யார் வருமானம் ஈட்டுகிறார்களோ அவர்களிடம் இருந்து நேரடியாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் விற்பனைவரி, சுங்கவரி, கலால் வரி போன்றவை விற்பனை, உற்பத்தி போன்றவைகளைச் சார்ந்து வசூல் செய்யப்படுகிறது. இந்தியாவில் இதற்கு எனத்தனியே சட்டம் உள்ளது. அது 1961ல் இருந்து முறையான நடைமுறையில் உள்ளது. இன்று இந்திய வருமான வரிச்சட்டம் 1961 என்று அழைக்கப்டுகிறது.

வருமான வரி கணக்கிட வேண்டிய வருமான அளவானது ஒவ்வோர் ஆண்டும் வேறுபடும். அது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி மசோதா என்றழைக்கப்படும் Finance Bill -ல் அறிவிக்கப்படும். ஆகவே பட்ஜெட் ஆனது வருமான வரிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பொதுவாக வருமான வரி என்பது “நிதி ஆண்டு” என்று அழைக்கப்படும்.இது ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை கணக்கிடப்படும். இதற்கு விதிவிலக்கு உண்டு அதை பிறகு பார்ப்போம். கடந்த நிதியாண்டில் வந்த வருமானத்திற்கு அடுத்து நிதியாண்டில் நாம் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது 01.04.2012 முதல் 31.03.2013 வரை வந்த வருமானத்திற்கு 01.04.2013 தொடங்கி அதற்கு என கொடுக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வருமான வரியானது பலவகைகளில் விதிக்கப்படுகிறது. இவற்றுள் தனிநபர்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அறக்கட்டளைகள் ஆகியவை அடங்கும். தனி நபர்களிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், பெண்கள் ஆகியோருக்கு எனச் சலுகைகள் உள்ளன. தற்போது வருமான வரி செலுத்த வேண்டும் என்றால் அவர்
வருமானவரித்துறையிடம் இருந்து PAN என்று அழைக்கப்படும், Permanent Account Number அதாவது நிரந்தர கணக்கு எண்ணை பெற்று இருக்கவேண்டும்.இக் கணக்கு எண்களை விநியோகிக்கக் கட்டணம் பெற்றுக்கொண்டு யூ.டி.ஐ வங்கி அளித்து வருகிறது. இதற்கு என நாடு முழுவதும் பல இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இரண்டு வண்ண நிழற்படம், இருப்பிடச் சான்று மற்றும் அடையாளச் சான்றிற்கான நகல்களை இணைத்து விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பித்த 10 நாட்களில் எண்ணும், 30 நாட்களில் அழகான அட்டையும் நமது முகவரிக்கு வந்து சேரும். இதற்கான தகவல்களை www.incometaxindia.gov.in என்ற இணைய தளத்தில் சென்று பார்க்கலாம், இணையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இணையத்தின் மூலமாக அனைத்து பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நாளில் வருமானவரிக் கணக்கையும் இணையத்தின் மூலமாக சமர்ப்பிக்கலாம். யார் யார் வருமான கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும் அதற்கான வருமான அளவு எவ்வளவு என்பதை நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள். மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு அவர்களின் அலுவலகத்திலேயே வருமானவரி பிடிக்கப்பட்டு அது அவரின் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டுவிடும். மாதச்சம்பளம் பெறுபவர்கள் அல்லாது மற்றவர்கள் தாமாகவே கணக்கிட்டு வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்தவேண்டும்.

மாதச்சம்பளம் பெறுபவர்கள் மட்டுமல்ல, வீட்டு வாடகை வருமானம், இதர வருமானம் என்றழைக்கப்படும் வட்டி வருமானம் போன்ற வருமானம் உள்ளவர்களும், சொத்து விற்பனை மூலமாக பெறக்கூடிய லாபத்திற்காகவும் வருமான வரி செலுத்தவேண்டும். வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் வைப்புத்தொகை உள்ளவர்களுக்கு அந்த நிறுவனங்களே வருகின்ற வட்டிக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக அதாவது TDS என்றழைக்கப்படும் Tax Deducted at Source மூலமாக பிடித்து விடுவார்கள்.

இதில் அல்லல் படுபவர்களும், அல்லது ஏமாற்றிவிடலாம் என்றும் கணக்குப்போட்டு பிறகு மாட்டிக்கொண்டு விழிப்பவர்களும் பெரும்பாலும் சொத்து விற்பனையின் மூலமாக லாபம் ஈட்டுபவர்களே ஆவார்கள். ஏனெனில் தற்பொழுது ஒவ்வொரு சொத்து பரிமாற்றத்திற்கும் கட்டாயமாக பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிரந்தரக் கணக்கு எண்ணை அளித்தாக வேண்டும். எவ்வளவு பரிமாற்றம் நடந்தது? யார் அதில் விற்பனையாளர்? யார் அதை வாங்கியவர்? என்ற தகவல்கள் எல்லாம் ஒவ்வொரு மாதமும் வருமான வரித்துறைக்கு வந்து சேர்ந்துவிடும். அதனடிப்படையில் கடிதங்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்படும்.கணக்கு சரியாக இருந்தால் மேல் நடவடிக்கை இருக்காது, வரி ஏய்ப்பு நடந்து இருந்தால் வரி, அபராதம், வட்டி என கட்டவேண்டிய தொகை கூடும். ஆகவே சொத்து விற்பவர்கள், சற்று விழிப்புடன் இருப்பது நல்லது.

நன்றி: http://siragu.com/?p=9112

answered Aug 21, 2013 by dexter (824 points)
...