• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

இளமையாக இருப்பது

+2 votes

40 வயதிற்கு மேலேயும் இளமையாக காட்சி அளிப்பது எப்படி?

asked Sep 3, 2013 in இளமை தோற்றம் by kelvirani (842 points)
   

2 Answers

+1 vote

1) தினமும் இரு முறை முகம் நன்கு கழுவி மாய்ஸ்சரைசர் தடவி கொள்ளவும்.
2) 2 மாதங்களுக்கு ஒரு முறை பெய்ஷியால் செய்து கொள்ளவும். இது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்குவதோடு ரத்த ஓட்டத்தை அதிகரித்து,பழைய தோலை உதிர்க்க உதவும்.
3) இரவு படுக்க செல்லும் முன் நல்ல முக கிரீமை தடவி மசாஜ் செய்து கொள்ளவும். இது தோல் மெருதுவாக இருக்க பயன்படும்.
4) மதியம் வெளியில் செல்லும் அவசியம் ஏற்பாடால் நல்ல சன் ஸ்க்ரீன் முகத்திலும் கை காலிலும் போட்டு கொண்டு கிளம்பவும்.
5) சாப்பாட்டில் நிறைய பச்சையான உணவுகளை சேர்த்து கொள்ளவும். கீரை போன்றவற்றில் இருக்கும் ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் முதுமை அறிகுறிகளை கட்டுப்படுத்தும்.
6) முகத்தில் தேன் தடவி கொள்ளவும். தேன் உலர்ந்த சருமம் கொண்டவருக்கு சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும்.
7) மீன் மற்றும் கோட் லிவர் ஆயில் கொண்ட மாத்திரைகள் சாபிட்டால் முகம் மற்றும் தோல் பொலிவுடன் காட்சி அளிக்கும்.
8) தூக்கம் சரியாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தூக்கம் தேவை.
9) தண்ணீர் மற்றும் இளநீர் குடித்து கொண்டு இருந்தால் தோலும் முடியும் இளமையாக காட்சி அளிக்கும்.
10) 30 நிமிடமாவது உடற் பயிற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் தோல் தோய்ந்து முதுமை அடைந்தது போல் காட்சி அளிக்கும்.
11) கண்களுக்கு வெள்ளரிக்காய் வைத்து குளிர வைக்கவும். கண்ணிற்கு கீழ் போட கூடிய நல்ல கிரீம் தடவ வேண்டும்.

answered Sep 3, 2013 by itzsuj (1,090 points)
0 votes

எப்போதும்முகத்தில்புன்னகையை தவழ விடுங்கள் நீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்வோடு வைத்திருங்கள்,குழந்தைகளோடு அதிகநேரம் செலவிடுங்கள் ஒய்வு நேரங்களில் இயற்க்கை நிறைந்த இடங்களில் நடை பயிலுங்கள் அதிகாலை எழுந்திருங்கள்

answered Sep 5, 2013 by piramanayagam (122 points)
...