• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தேசிய கீதம் பாடலை எழுதியவர் யார் ?

+2 votes
asked Apr 26, 2013 in பொது by sathish (406 points)
   

2 Answers

+1 vote
நம் நாட்டு தேசிய கீதத்தை எழுதியவர் ரபீந்தரநாத் தாகூர். இதனை சமஸ்க்ரிதம் கலந்த பெங்காலியில் அவர் இயற்றினார். இதனை ஆபித் அலி என்பவர் ஹிந்தி யில் மொழி பெயர்பிட்டார்.முதன் முதலில் 27 டிசம்பர் 1911 அம் வருடம் காங்கிரஸின் கல்கட்டா பகுதியில் பாட பட்டது. இந்திய பாராளுமன்றம் 24 ஜனவரி 1950 ஆம் ஆண்டு இதனை  தேசிய கீதமாக ஏற்றுகொண்டது.
answered Apr 26, 2013 by itzsuj (1,090 points)
+2 votes
மகாகவி ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், 52 வினாடிகள் ஒலிக்கக்கூடியது. நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்திதான். மொத்தம் ஐந்து பத்திகளை தாகூர் எழுதி இருக்கிறார். தேசிய கீதம் முதன்முறையாக 1911-ம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டது. அந்த மாநாடு ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு வரவேற்பு அளித்தது. ஆகவே, அன்று பாடப்பட்ட இந்தப் பாடல் இங்கிலாந்து மன்னரை வரவேற்றுப் பாடப்பட்டது என்ற சர்ச்சைகூட சமீபத்தில் உருவானது.

இரண்டு தேசங்களின் தேசிய கீதத்தை எழுதிய பெருமை தாகூருக்கு உண்டு. அவர்தான் பங்களாதேஷின் தேசிய கீதமான 'அமர் ஷோனார் பாங்க்ளா’ என்ற பாடலை எழுதினார். வங்காள மொழியில் அமைந்த 'ஜன கண மன’ பாடலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவரும் தாகூரே!

1911-ம் ஆண்டு 'ஜன கண மன’ பாடப்பட்டாலும் அதற்கு முறையாக இசை அமைக்கப்பட்டது 1918-ம் ஆண்டுதான். இந்தப் பாடலுக்கு, ஆந்திர மாநிலத்தின் மதனப்பள்ளியைச் சேர்ந்த ஜேம்ஸ் எச். கசின் மற்றும் அவரது துணைவியார் ஆகிய இருவரும் இசை அமைத்தனர். மதனப்​பள்ளியில் அன்னிபெசன்ட் அம்மையார் அமைத்த தியாசபிக்கல் கல்லூரியில், 1919-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கி இருந்த நாட்களில்தான் தாகூர் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அப்போது, கல்லூரியின் முதல்வராக இருந்த மார்க்ரெட் கசின், தாகூரின் முன்னிலையில் இந்தப் பாடலுக்கு மெட்டு அமைத்தார். அதை, தாகூர் மிகவும் ரசித்துப் பாராட்டி இருக்கிறார். அந்த மெட்டுதான் இன்று நாம் பாடும் பாடலுக்கான அடிப்படை.  

'ஜன கண மன ’ பாடலை நேதாஜி தனது ஐ.என்.ஏ-வில் தேசியகீதமாகப் பயன்படுத்தி வந்தார். ஐ.என்.ஏ-வுக்காக இந்தப் பாடலை பேண்ட் வாத்திய இசைக் குழுவினர் வாசிக்கும்படி இசை அமைத்தவர் கேப்டன் ராம்சிங். இதற்காக, இவருக்கு நேதாஜி தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவித்து இருக்கிறார். 'ஜன கண மன’ பாடல் இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட ஒன்று.
answered May 1, 2013 by stranger012 (4,170 points)
...