• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வரகு சோறு செய்வது எப்படி?

0 votes
asked Sep 16, 2013 in சாத வகைகள் by BlitzkriegKK (6,860 points)
   

1 Answer

0 votes

வரகு பொங்கல்

தேவையானவை:

வரகரிசி - 1 கப்,
பயத்தம் பருப்பு - அரை கப்,
தண்ணீர் - 4 கப்,
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - ஒரு சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
நெய்யும் எண்ணெயுமாக சேர்த்து - கால் கப்,
கடுகு - ஒரு சிட்டிகை,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
முந்திரி - 8,
சீரகம் - கால் டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை:

வெறும் கடாயில் பயத்தம் பருப்பை லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து, அந்தச் சூட்டில் வரகரிசியைப் போட்டு வறுக்கவும். அதை இருமுறை கழுவி 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். வாணலியில் நெய்யும் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி, கடுகு, உ.பருப்பு, முந்திரி, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளித்து பொங்கலை சேர்த்து நன்றாக மசித்து உப்பு சேர்த்து கிளறவும்.
சூடான வரகு பொங்கல் ரெடி...
தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். 4 மிளகை சிறிது பொடித்து சேர்த்தால் மணமும் காரமும் கூடும். குக்கரில் நேரடியாக வைப்பதை விட ஒரு பாத்திரத்தில் பொங்கலை வேக வைத்தால் அடி பிடிப்பதை தவிர்க்கலாம்.
நன்றி: http://www.dinakaran.com

answered Sep 19, 2013 by anjvelu (3,018 points)
...