• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வேறுவித இட்லி

0 votes

அரிசி உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிடும் இட்லி போர் அடித்து விட்டது. வேறு முறையான இட்லி கூறுங்களேன்.

asked Sep 18, 2013 in இட்லி by itzsuj (1,090 points)
edited Sep 18, 2013 by itzsuj
   

1 Answer

+1 vote

ஐந்து பருப்பு இட்லி:
தேவையானவை:
அரிசி- 100 கிராம்
உளுத்தம் பருப்பு- 100 கிராம்
கடலைப் பருப்பு-100 கிராம்
துவரம் பருப்பு- 100 கிராம்
பயத்தம் பருப்பு- 100 கிராம்
வெந்தயம்- 1 பிடி
காய்ந்த மிளகாய்-10
உப்பு- தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுந்து, கடலை பருப்பு,பயத்தம் பருப்பு, துவரம் பருப்பு,வெந்தயம் அனைத்தையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அரைக்கும் பொழுது இவற்றுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரிது எடுங்கள்.
அரைத்த மாவை உப்பு போட்டுக் கலக்கி வைத்துவிட்டு இரண்டு மணிநேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுங்கள்.
சுவையான ஐந்து பருப்பு இட்லி இரண்டே நிமிடத்தில் தயார்!

answered Sep 18, 2013 by kelvirani (842 points)
edited Sep 19, 2013 by kelvirani
...