• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சேமியா பகாளாபாத்

0 votes

சேமியா பகளாபாத் செய்வது எப்படி?

asked Sep 18, 2013 in பொது by kelvirani (842 points)
   

1 Answer

0 votes

தேவையான பொருட்கள்:
சேமியா- 100 கிராம்
தயிர்- 4 கப்
பால்- 4 கப்
நெய்- 2 டீஸ்பூன்
கடுகு- 2 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய்-4
நறுக்கிய இஞ்சி-1 டீஸ்பூன்
பெருங்காயம்- 1 சிட்டிகை
கொத்தமல்லி,கருவேப்பில்லை- சிறு கோது
முந்திரி,திராட்சை-சிறிதளவு
துருவிய காரட்-1
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
சேமியாவை வெறும் சட்டியில் வருது எடுக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் வருத்த சேமியாவைப் போட்டு வேகவைக்கவும்.இது ஆரிய பின் பால் விட்டு சிறிதளவு தயிர் சேர்த்து உறைய விடவும். பரிமாறும் முன் புளிக்கத கெட்டி தயிர் சேர்த்து, கடுகு, இஞ்சி, பெருங்காயம் தாளித்து, வருத்த முந்திரி,திராட்சை,துருவிய காரட்,நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரித்தால் சேமியா பகாளாபாத் ரெடி.

answered Sep 18, 2013 by itzsuj (1,090 points)
...