• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வடைகறி

+1 vote

வடைகறி செய்வது எப்படி?

asked Sep 19, 2013 in வடை by itzsuj (1,090 points)
   

1 Answer

+1 vote

மசால்வடை செய்ய:
தேவையானவை:
இஞ்சி- 1 இன்ச்
பூண்டு-8 பல்
பட்டை-2
சோம்பு-1 டீஸ்பூன்
கடலை பருப்பு-350 கிராம்
மஞ்ச போடி- ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணை- பொரிக்க
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 மேஜை கரண்டி

செய்முறை:
கடலை பருப்பை ஊற வைத்து, ஊறிய பின் தண்ணீர் விடாமல், இஞ்சி, பூண்டு,பட்டை,சோம்பு,மஞ்ச தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து அரைத்துக் குலவும். அரைத்த விழுதில் கொத்தமல்லி,வெங்காயம் கலந்து வடைகளாக தட்டி,எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

கிரேவி தயாரிக்க தேவையானவை:
பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி-1 கப்
இஞ்சி பூண்டு விழுது-1 டீஸ்பூன்
பிரிஞ்சி இல்லை-2
தேங்காய்,கசகசா- விழுது 2 டீஸ்பூன்
சோம்பு- 1/2 டீஸ்பூன்
பட்டை- ஒன்று
உப்பு- தேவையான அளவு
எண்ணை- ஒரு மேஜை கரண்டி
மஞ்ச போடி- ஒரு சிட்டிகை

செய்முறை:
வாணலியில் எண்ணை ஊற்றி,பிரிஞ்சி இல்லை,சோம்பு தாளிக்கவும். பின் வெங்காயத்தை வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுகுது, தேங்காய், கசகச விழுது சேர்த்து சிறிது தண்ணீர் விடவும். உப்பு, மஞ்சள் தூள் போட்டு கொதிக்கவிட்டு கொதித்தபின் வடைகளை உதிர்த்து போட்டுக் கிளறி இறக்கவும்.

answered Sep 19, 2013 by kelvirani (842 points)
...