• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

முடி கொட்டுவதை எவ்வாறு தடுக்கலாம்

+1 vote
asked Sep 24, 2013 in கூந்தல் by anjvelu (3,018 points)
   

3 Answers

0 votes

யாராவது பதில் சொல்லுங்கப்பா. இங்க நெறைய பேரு இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு காசில்லாம நஷ்டப்படுறாங்க...

answered Sep 25, 2013 by BlitzkriegKK (6,860 points)
+1 vote

கூந்தல் மிக அதிகமாக உதிரும்போது, வெந்தயக்கீரையை அரைத்துத் தலையில் தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் கழித்துக் கூந்தலைத் தண்ணீரால் அலசினால் முடி உதிருவது நிற்கும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணையுடன் ஒரு முட்டையை நன்கு கலக்கி அதை தலையில் தேய்த்துக்கொண்டு அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு குளிர்ந்த இருந்த நீரில் தலையை நன்றாக அலசி ஷாம்பூ போட்டுக் குளிக்கவும். இதனால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைப்பதுடன் கூந்தல் மிருதுவாகவும் ஆகும்.

தேநீர் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்துவிட்டு தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்படையும். 10-15 செம்பருத்தி இலைகளைப் பறித்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து ஓரே ஒரு மேசைக் கரண்டி சீய்க்காய்த்தூளைக் கலந்து நீராடினால் தலைமுடி பளபளக்கும்.

இளநரை வராமல் தடுக்க மருதாணித் தைலம், அரைகீரைத் தைலம், பொன்னங்கண்ணி தைலம், கரிசாலங்கண்ணி தைலம், செய்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தரும்.

வழுக்கையை சரிப்படுத்த சில வழிமுறைகள்:

இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கை உள்ள இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெயில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அன்றாடம் உப யோகித்து வந்தால் வழுக்கை ஏற்படுவதை தவிர்க்கலாம்.

வழுக்கை விழுவதற்கான காரணங்களில் புழுவெட்டும் ஒன்று. இதற்கு சோற்றுக் கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வழு வழுப்பான 'ஜெல்' போன்ற திரவத்தை எடுத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கை விழுவதை தடுக்கலாம்.

அரளிச் செடியினை கீறி பால் எடுத்து தடவி வர புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பயன் கிட்டும்.

சிறிய வெங்காயத்தை அரைத்து மயிர்க்கால்களில் நன்கு அழுத்தி தடவி ஊற வைத்து தலையை அலசினால் புழுவெட்டினால் ஏற்படும் வழுக்கைக்கு நல்ல பலன் கிடைக் கும்.

அதிமதுரத்தை எருமைப்பாலில் அரைத்து வாரத்திற்கு மூன்று முறை தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

பூண்டை உலர்த்திப் பொடி செய்து அதைத் தேனில் கலந்து வழுக்கையின் மீது பூசி வந் தால் முடி வளரும்.

answered Feb 3, 2014 by parthiban (15,490 points)
0 votes

முடி உதிர்வதற்கு காரணங்கள் சிலவற்றுள் சுற்றுசுழல் ஒரு காரணம். தினமும் தலை குளித்து தேங்கஎன்னை தடவ நாளுக்கு நாள் முடி உதிர்வது குறையும். நல்ல பதிலை சொல்லுங்க.

answered Dec 27, 2015 by PARTHIBAN.G (1,540 points)
...