• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மோட்டார் வாகனத்தில் "சிசி" எதை குறிக்கிறது?

0 votes
மோட்டார் வாகனத்தில் "சிசி" எதை குறிக்கிறது?
asked Apr 30, 2013 in எப்படி? by parthiban (15,490 points)
edited Apr 30, 2013 by parthiban
   

2 Answers

0 votes
கியுபிக்  சென்டிமீட்டர்ஸ் (cubic centimetres) ஒரு இயந்திரத்தின் வேகத்  திறனை குறிப்பிடுகிறது.
answered May 3, 2013 by Chester (1,152 points)
0 votes

மோட்டார் வாகனத்தில் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
எஞ்சின் அதன் ஸ்ட்ரோக் மூலமாக இரண்டு வகைப்படும்.
1. டு (இரண்டு) ஸ்ட்ரோக் எஞ்சின்
2. போர் (நான்கு) ஸ்ட்ரோக் எஞ்சின்

இப்பொழுது போர் (நான்கு) ஸ்ட்ரோக் பெட்ரோல் எஞ்சின் வேலை செய்யும் விதம்.
பெட்ரோல் எஞ்சினிலிருந்து புவியீர்ப்பு விசை மூலமாக கார்புறேடோரை வந்தடைகிறது. அங்கு வெளிப்புற சுத்தமான காற்றும் பெட்ரோலும் ஏறக்குறைய 12 : 1 என்ற விகிதத்தில் கலந்து (Air Fuel Mixture) எஞ்சின் சிலண்டருக்குள் வந்தடைகிறது. இவற்றை கட்டுபடுத்த இன்லெட் மற்றும் அவுட்லெட் வால்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் திறந்து முடுகின்றன.
போர் (நான்கு) ஸ்ட்ரோக் எஞ்சின்
1. Suction Stroke
2. Compression Stroke
3. Power or Working Stroke
4. Exhaust Stroke.

1.Suction Stroke:
முதலில் பிஸ்டன் மேலிருந்து கிழ்நோக்கி நகரும்போது இன்லெட் வால்வு திறக்கப்பட்டு ஏறிபொருள் சிலிண்டருக்குள் வருகிறது. பிஸ்டன் கிழிருந்து மேல்நோக்கி நகரும்போது இன்லெட் வால்வு மூடிக்கொள்கிறது.

  1. Compression Stroke
    அவுட்லெட் வால்வு ஏற்க்கனவே மூடி இருப்பதால் சிலிண்டருக்குள் இருக்கும் எரிபொருள் மேல்நோக்கி நகரும் பிஸ்டன் அழுத்தத்தால் அதன் அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் அழுத்தம் உள்ளிருக்கும் எரிபொருளின் மூலகூறுகலை நன்றாக அழுத்தி அவற்றின் இடைவெளியை குறைக்கிறது.

  2. Power or Working Stroke
    இப்பொழுது பிஸ்டன் மேல்நோக்கி வந்து மீண்டும் கிழ்நோக்கி செல்வதற்கு முன்பாக ஸ்பார்க் ப்ளக் மின் துண்டால் பெறப்பட்டு சிறிய நெருப்பினை உமிழ்கிறது. இந்த நெருப்பு ஏற்க்கனனவே அதிக அழுத்தத்தில் இருக்கும் எரிபொருளை எரிக்கிறது. அப்பொழுது சிலிண்டருக்குள் அதக வெப்பமும், அதிக அழுத்தமும் மேலும் ஏற்ப்பட்டு பிஸ்டனை வேகமாக கிழ்நோக்கி தள்ளுகிறது.

4.Exhaust Stroke.
வேகமாக கிழ்நோக்கி தள்ளப்பட்ட இந்த ஆற்றல் அடுத்த Power or Working Stroke
வரும்வரை பகிர்ந்துக்கொள்கிறது. பிஸ்டன் கிழிருந்து மேல்நோக்கி நகரும்போது அவுட்லெட் வால்வு திறக்கப்பட்டு புகை வெளியே வருகிறது.

பிஸ்டன் ஒவொரு முறையும் மேல்நோக்கி வந்து மீண்டும் கிழ்நோக்கி செல்லும். பிஸ்டன் மேல் பாகத்திற்கும் சிலிண்டரின் உட்புறமுள்ள பாகத்திற்கும் இடையில் அமைந்துள்ள கொள்ளளவு செண்டி மீட்டர் அளகில் CC என்று அழைக்கப்படுகிறது.

நன்றி நண்பர்களே.

answered Apr 28, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...