• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

நான் ஆங்கிலம் சரளமாக பேச virumbugiren? ப்ளீஸ் help

+1 vote
asked Dec 10, 2013 in பொது by vinayagam.g (62 points)
recategorized Dec 10, 2013 by rradhac
   

2 Answers

+1 vote

உலகின் பழம் பெரும் மொழிகளில் ஒன்றான தமிழை பயின்ற நமக்கு ஆங்கிலம் கற்றுக்கொண்டு சரளமாக பேசுவது மிகவும் சுலபமே ஆகும்.இதற்கு நிறைய வழிகள் உள்ளன.
ஆங்கிலம் கற்று கொடுக்கும் வகுப்புகள் தமிழ் நாட்டில் உள்ளன. வீட்டா(veta)இதில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.இவர்கள் Spoken english இல் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதே போல் சகா இங்கிலீஷ்( http://www.sagaenglish.in/) தமிழ் மூலமாக ஆங்கிலம் சொல்லி தருகின்றனர்.http://www.speakenglishfasttrack.com/ - இவர்கள் DVD மற்றும் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர். அல்லது தனிப்பட்ட ஆசிரயர்கள் மூலம் கூட கற்றுகொள்ளலாம்.http://www.thinkvidya.com/chennai/spoken-english-classes இங்கு நம் வீட்டின் அருகே இருக்கும் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கலாம்.
இணைய தளத்தின் மூலம் இலவசமாகவும் ஆங்கிலம் பயிலலாம்.
http://www.learn-english-online.org/
http://www.britishcouncil.in/english/learn-online
போன்ற இணைய தளங்கள் மிகவும் பிரபலமாகும்.

answered Dec 11, 2013 by kelvirani (842 points)
0 votes

கொஞ்சம் வழக்கத்துக்கு மாறாக பேசுவோமே..
வழிகள்:

  1. ஒரு வேற்று மொழி பெண்ணிடம் பேச பழகுங்கள். முக்கியமாக அவருக்கு தமிழ் தெரியக்கூடாது.. இது பக்காவா வொர்க் அவுட் ஆகும் பாஸ்.. நான் கியாரண்டி..
  2. ஆங்கிலபடங்களை subtitle உடன் பார்க்க வேண்டும். இது எனக்கும் உதவியாக இருந்தது..
  3. ஒரு ஆங்கில த்ரில்லர் நாவல் அல்லது காதல் நாவல் படிக்கலாம். குறிப்பாக ட்ரெயினில் போகும் பொது படிக்கலாம். சீனாகவும் இருக்கும். உதவியாகவும் இருக்கும். குறிப்பாக அதிக உரையாடல் உள்ள நாவல் முக்கியம்.
  4. தயக்கத்தை தவிர்க்கவும். தனியாக பலப்பல மாடுலேஷனில் பேசவும்.
  5. தயவு செய்து ட்வீட்டரில் ட்வீட் செய்யவும் ஆங்கிலத்தில். இது உங்களை சுருக்கமாக அதே சமயம் வலிமையாக பேச உதவும்..

இன்னும் பல. அப்புறம் சொல்றேன்..

answered Dec 17, 2013 by BlitzkriegKK (6,860 points)
...