• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கேரம் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார் ?

+1 vote

எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது ?

asked Jan 27, 2014 in பொது by veeramani (6,006 points)
   

1 Answer

+1 vote

விடுமுறை தினமான அந்த ஞாயிறும் வார இறுதிப்பள்ளி ஆசிரியரான ஹென்றி ஹேஸ்கலுக்கு வழக்கமாகவே போய் இருக்கும் ஆனால் அப்பள்ளியின் விளையாட்டுக்கூடத்தில் இருந்து பெரும் உற்சாக கூச்சலும் ,கும்மாளவும் வரவே மாணவர்கள் ஏன் இப்படி சத்தமிடுகிறார்கள் எனப் பார்க்க போனது ஒரு புதிய கண்டுப்பிடிப்பை உருவாக்கியது. ஹென்றி அங்கு கண்டது இது தான், ஒரு பில்லியர்ட்ஸ் டேபிளை மாணவர்கள் சூழ்ந்து நின்று கொண்டு உற்சாகமாக விளையாடிக்கொண்டு ஒருவரை இடிப்பது தள்ளுவதுமாக ,கூக்குரல் எழுப்பிகொண்டும் இருந்தார்கள்.

நம்ம ஊரு வாத்தியாராக இருந்தால் ஏய் இங்கே என்ன சத்தம் ...வகுப்புக்கு போகாம இங்கே என்ன பண்றிங்க ..ஓடுங்க என தொறத்திவிட்டு கடமையை செய்து இருப்பார். ஆனால் அமெரிக்க வாத்தியார் ஆச்சே ஹென்றி அப்படி எல்லாம் கட்டுப்பெட்டியாக இல்லாமல் கொஞ்ச நேரம் மாணவர்களை கூர்ந்து கவனித்தார் மாணவர்கள் முறை வைத்து வரிசையாக அடங்கா ஆர்வத்துடன் குதுகளமாக ஆடிக்கொண்டு இருந்தார்கள். எத்தனையோ கேம்கள் இருக்க பில்லியர்ட்ஸ் மீது ஏன் இத்தனை ஆர்வம் என யோசிக்கலானார்.

காரணம் அறிந்தார்... என்னவெனில் பில்லியர்ட்ஸ் டேபிள் விலை அதிகமானது அனைவர் வீட்டிலும் வாங்கி வைத்து விளையாட முடியாது,மேலும் அதிக இடமும் அடைக்கும் , எனவே பெரும்பாலான மாணவர்கள் பள்ளியில் இருக்கும் டேபிளை பெரிதும் விரும்பி பயன்ப்படுத்திக்கொண்டார்கள்,மேலும் அதிகம் ஓடி ஆடாமல் உள்ளரங்கிலேயே ஆடினாலும் விறு விறுப்பாக ஆடக்கூடிய குழு விளையாட்டாகவும் இருந்தது.

பில்லியர்ட்ஸ் போன்ற ஒரு விளையாட்டு ஆனால் கையடக்கமாக, மலிவாக அனைவருக்கும் வாங்கும் விலையில் வேறு விளையாட்டுகள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தார், இல்லை என்றால் என்ன நாம் உருவாக்குவோம் என யோசித்து பில்லியர்ட்சையே கொஞ்சம் மாற்றம் செய்து சிறிய வடிவில் ஒரு விளையாட்டு பலகையை உருவாக்கினார் அதற்கு கேரம் எனவும் பெயரிட்டார் , ஆம் கேரம் போர்டை கண்டுப்பிடித்தவர் ஹென்றி ஹேஸ்கல் என்ற பள்ளி ஆசிரியரே.

பல நாடுகளிலும் கேரம் போர்ட்டு போன்ற விளையாட்டுக்கள் இருந்திருக்கலாம் ஆனால் கேரம் போர்ட் எனப் பெயர் வைத்து அமெரிக்காவில் முதன் முதலில் காப்புரிமை பெற்றவர் இவர் ஒருவரே ,எனவே அதிகாரப்பூர்வமாக அதன் கண்டுப்பிடிப்பாளர் என அறியப்படுவது ஹென்றி ஹேஸ்கல் ஆகும்.

அதுசரி, ” கேரம்” விளையாட்டில் வெள்ளைக்கு அதிக மதிப்பெண் ஏன்?

வேறு என்ன நிறவெறி தான்..

answered Jan 28, 2014 by parthiban (15,490 points)
...