• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வளர்ந்து வரும் தொழில் முறைகளை விவசாகள் எவ்வாறு பயன்படுதுகிண்றனர் ?

+1 vote
asked Jan 30, 2014 in வேளாண் தொழில்நுட்பம் by veeramani (6,006 points)
   

1 Answer

+1 vote

1770-கள்ல கவர்னர் ஜெனரலா இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸோட சட்டம் என்ன சொன்னுச்சு தெரியுமா? விளைச்சலை மூணு பங்கா பிரிச்சு, ஒரு பங்கைக் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ரெண்டாவது பங்கை ஜமீன்தாருக்கும் கொடுத்துட்டு, எஞ்சின மூணாவது பங்கைத்தான் உழவனுக்குக் கொடுக்கச் சொன்னுச்சு. அவ்வளவு கடுமையான வரிவிதிப்பு. வங்கத்துல பஞ்சம் உச்சத்துல இருக்கும்போதுதான் ஆயிரக் கணக்கான டன் உணவு தானியங்களை பிரிட்டனுக்கு அள்ளிக்கிட்டுப்போச்சு ஆங்கிலேய நிர்வாகம். ‘இந்தியாவுல மக்கள் பசியால சாகக் காரணம் பிற்போக்கான இந்திய வேளாண்மைதான்’னு இங்குள்ள பிரபுக்கள் ராணிக்கு எழுதியபோது, ராணி, ஜான் அகஸ்டின் வால்கர்னு ஒரு விஞ்ஞானியை அனுப்பிவெச்சாங்க. ஒரு வருஷம் நாடு முழுக்கச் சுத்திப் பார்த்த வால்கர், ராணிக்கு என்ன அறிக்கை அனுப்பினார் தெரியுமா? ‘இந்திய உழவர்களுக்கு கத்துக்கொடுக்க எதுவுமில்லை; நான்தான் அவங்ககிட்டேயிருந்து கத்துக்கிட்டேன்’னு எழுதினார். பின்னாடி இங்கே வந்த ஆல்பர்ட் ஓவார்டு - இந்திய உழவாண்மை ஆராய்ச்சி மையத்தை உருவாக்கினவர் - இன்னும் ஒருபடி மேலே போய் ‘இந்திய உழவர்கள் எனக்குப் பேராசிரியர்களாக இருந்தார்கள்’னு சொன்னார்.

ஆக, மக்களைக் கொன்னது பஞ்சமோ, பாரம்பரிய இயற்கை வேளாண்மையோ இல்லை; அரசாங்கத்தோட தவறான கொள்கைகள். இன்னைக்கும் எங்கெல்லாம் பசி - பஞ்சச் சாவுகள் நடக்குதோ அதுக்குக் காரணமா அதுதான் இருக்கு.
---இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

answered Feb 4, 2014 by parthiban (15,490 points)
...