• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சீனப்பெண்கள் தமிழில், தமிழ்பெண்கள்???

+1 vote

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தொடர்பியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சீன அரசு வானொலியின், தமிழ் ஒலிபரப்பு பிரிவு, பெண் அறிவிப்பாளர்கள் ஷன்ஷிங், ஷோசின் பங்கேற்றனர். துறைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர் தங்க ஜெய்சக்திவேல் தொகுத்து வழங்கினார். ஷன்ஷிங், ஷோசின் இருவரும், ஒரு வார்த்தை கூட வேறு மொழி கலக்காமல், சுத்த தமிழில் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

ஷோசின், புதுச்சேரியில் தங்கி தமிழ் பயின்றுள்ளார். பரதம், கர்நாடக இசை பயின்று வருகிறார். தமிழ்- சீன பழமொழிகளுக்கு உள்ள ஒற்றுமை குறித்து ஒப்பீட்டு நூல் ஒன்றை, தமிழில் எழுதி வருகிறார். ஷன்ஷிங், பாரதியார் பல்கலையில், தமிழ் மொழி குறித்து, மேலும் கற்று வருகிறார்.

asked Feb 14, 2014 in பொது by parthiban (15,490 points)
   

Please log in or register to answer this question.

...