• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

திருடிய மருத்துவ மாணவர்கள்

+1 vote

காஞ்சிபுரத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி வெளியூர் சென்றிருப்பதால் தானும் வெளியூர் செல்வதால் வீட்டின் சாவியை முதல் தளத்தில் தங்கி படிக்கும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் அவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து வீட்டில் உள்ள நகைகளை எடுத்துவிட்டார்கள் போலிஸ் விசாரனைக்கு பிறகு திருப்பி தந்துவிட்டார்கள்.

எதற்காக திருடினீர்கள் என்று கேட்டால் மருத்துவ படிப்பில் அரியர் விழுந்த பாடத்தில் தேர்வு செய்ய ரூ.1.5 லட்சம் லஞ்சம் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்தால், தேர்வில் தேர்ச்சி அடைய செய்வார்கள் அதனால் திருடியதாக வாக்குமுலம் தந்துள்ளனர்.

அவர்களை திருட செய்தவர்கள் யார்? திருட வாய்ப்பு கொடுத்தவர்கள் யார் ஏனென்றால் ஏமாறுபவன் தான் முதல் குற்றவாளி? பெண் என்பதால் அதுவும் படிக்கும் பெண் என்பதால் வீடு சாவியை நம்பி தரலாமா?

asked Feb 14, 2014 in பொது by parthiban (15,410 points)
   

1 Answer

0 votes

படிக்கும் மாணவி என்பதால் நம்பிக்கை வைத்து சாவியை கொடுத்ததில் தொழிலதிபர் முதல் குற்றவாளி. தேர்ச்சி பெறாத பாடத்திற்கு ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்ட கல்லூரி நிர்வாகம் இரண்டாம் குற்றவாளி. தன் எதிர்காலத்தை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், நம்பிக்கை துரோகம் செய்த கல்லூரி மாணவி முன்றாம் குற்றவாளி. நன்றி.

answered Apr 22, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...