• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

டிப்ஸ் ப்ளீஸ் நடைபயிற்சி செய்வதால் எனது அக்குளில் எரிச்சல்,தழும்பு உள்ளது என்ன செய்யலாம் ப்ளீஸ்

0 votes
asked Feb 27, 2014 in பொது by marimuthu (70 points)
   

2 Answers

0 votes

எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அதனை தினமும் அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். வேண்டுமானால் எலுமிச்சை சாற்றுடன், உப்பு அல்லது சர்க்கரை சேர்த்தும் பயன்படுத்தலாம். அதிலும் இந்த முறையை தினமும் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம்.

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

answered Mar 10, 2014 by parthiban (15,490 points)
0 votes

இது முழுக்க நடை பயிற்சியினால் வருவதில்லை... நடைப்பயிற்சி முடிந்ததும்... சிறிது ஓய்வுக்குப்பிறகு குளித்து விடுங்கள்... அக்குளில் எரிச்சல் வருவதற்கு வியற்வை தான் காரணம். தழும்புக்கு காரணம் நீங்கள் அணியும் உடை சுத்தம் தானா என்று பார்க்கவும்.!

answered Jun 11, 2014 by shanevel (296 points)
...