• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

ஆஸ்கார் 2014

0 votes

ஆஸ்கார் 2014

asked Mar 3, 2014 in விருதுகள் by premalatha (2,494 points)
   

1 Answer

0 votes

லாஸ் ஏஞ்சல்ஸ்: திரைப்படங்களுக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரிவுகளில் 'கிராவிட்டி' திரைப்படம் 6 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

உலக திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்காக ஆஸ்கர் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 86வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை '12 இயர்ஸ் அ ஸ்லேவ்' என்ற படம் வென்றது.

சிறந்த நடிகருக்கான விருதை மாத்யூ மெக்கொனாகே வென்றார். 'டேலஸ் பையர்ஸ் க்ளப்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது இவருக்கு கிடைத்துள்ளது.

'டேலஸ் பையர்ஸ் க்ளப்' படத்தில் நடித்ததற்காக ஜார்டு லெடோவுக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

'ப்ளூ ஜாஸ்மீன்' படத்தில் நடித்த கேட் பிளான்செட் சிறந்த நடிகைக்காக விருதை பெற்றார்.

'கிராவிட்டி' படத்தை இயக்கிய அல்போன்ஸோ குவாரன் சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டிச் சென்றார்.

சிறந்த இயக்குனர், விஷுவல் எஃபெக்ட்ஸ், படத்தொகுப்பு, ஒலிக்கலவை உள்ளிட்ட பிரிவுகளிலும் கிராவிட்டி விருதை பெற்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது, கேத்தரின் மார்ட்டினுக்கு 'தி கிரேட் கேட்ஸ்பை" படத்துக்கு கிடைத்துள்ளது. ஆடை வடிவமைப்பாளர் கேத்தரின் மார்ட்டின் பெறும் 3வது ஆஸ்கார் விருது இது.

சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கார் விருது , 'ஃப்ரோஸன்" படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை 'மிஸ்டர் ஹப்லட்' பெற்றது.

சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருதை 'டல்லாஸ் பையர்ஸ் கிளப்' படத்துக்கு லி மற்றும் மாத்யூஸ் பெற்றனர்.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை 'தி கிரேட் பியூட்டி' பெற்றது.

சிறந்த ஆவணப்படமாக '20 பீட் பிரம் ஸ்டார்டம்", சிறந்த ஆவணக் குறும்படமாக, 'தி லேடி இன் நம்பர் 6' படமும் பெற்றது.

answered Mar 3, 2014 by premalatha (2,494 points)
...