• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தேமல் குறைய

0 votes

தேமல் குறைய குறிப்பு சொல்லவும்

asked Mar 8, 2014 in முக அழகு by yasothakarthik (70 points)
   

1 Answer

0 votes

தகரை விதையை எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு அரைத்து உடலில் பூசி வந்தால் உடலிலுள்ள தேமல் குறையும்.

தேங்காய் ஓடுகளை ஒரு துவாரமிட்ட சட்டியில் போட்டு எரிக்க வேண்டும். அவைகளிலிருந்து வடியும் தைலத்தைச் சட்டிக் கீழ் துவாரத்திற்கு நேராக ஒரு பாத்திரத்தை வைத்து பிடித்துக் கொள்ளவேண்டும். அந்த தைலத்தை உடலிலுள்ள தேமல் மேல் தடவி வந்தால் தேமல் குறையும்.

எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.

துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

answered Mar 10, 2014 by parthiban (15,490 points)
...