• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கவிதை வரிகள்

+2 votes
இதயம் தொட்டு பேசுகிற கவிதை வரிகள் ?
asked May 2, 2013 in பொது by தமிழன் (6,854 points)
edited May 2, 2013 by தமிழன்
   

9 Answers

+2 votes
அம்மா என்றழைக்க
எனக்கில்லை மகவு
என்னை நானே வருத்தி அழிக்கிறேன்
தாயை போற்றும் உலகு
தவிக்கும் நம்மை
தரம்குறைவாய் நோக்குவதுமேனோ
சுற்றங்கள் கூடுகின்ற வேளைகளில்
குற்றம் இழைத்ததுபோல்
குனிந்து நிற்கின்றேன்
இது பலருக்குத்தெரியாத வலிகள்
என்  வலிகள் கண்ணீர் துளிகளோடு
எனக்கு மட்டுமே சொந்தமாகின்றன.
ஆளுக்கொரு வடிவில் துன்பங்களை
அளந்து கொடுக்கும் இறைவன் நாளை
ஆளை மாற்றும்போது யாரும் அகப்படலாம்
ஆகவே நம் காயங்களை குத்தி மகிழாதீர்.
answered May 2, 2013 by varul (1,758 points)
+2 votes
தேவதைகளின் தேவதை:
---------------------------------
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்:
--------------------------------------------------------
நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே… வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?
அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன. உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.
 
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்.

முதல்முறையாக ஒருமுறை உன் மடியில்
படுத்து நான் அழுதுவிட்ட போது…ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை,
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.

 நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது
நீதானா? தொடப்போனால்
சினுங்குவதில்லையே… நீயா? முத்தம்
கேட்டால் வெட்கம் தருவதில்லையே…
நீயா? கவிதை சொன்னால் நெஞ்சில்
சாய்வதில்லையே …நீயா? எவ்வளவு
அருகிலிருந்தும் அந்த வாசனையில்லையே…
நீயா? வேண்டாம். நீயே வைத்துக்கொள்.
புகைப்படத்திலெல்லாம் நீ இருக்க முடியாது.

நாள் முழுவதும் கூந்தலிலிருந்த
பூவை
எந்த சலனமுமுன்றி
எடுத்தெறிந்துவிட்டு
வேறு பூவை சூட்டிக்கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்?

-          தபூ சங்கர்
answered May 2, 2013 by anjvelu (3,018 points)
+1 vote
என் காதலை உன்னிடம் எப்படிச் சொல்வது...
-------------------------------------------------------------
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.
 
சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?
 
சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?
answered May 2, 2013 by anjvelu (3,018 points)
edited May 2, 2013 by anjvelu
+2 votes
எப்போதும்  உன்னோடு  இருக்கவே  விரும்புகிறேன் …  
உன்  கோபத்தால்  என்னை  தொலைத்து  விடாதே  !!!
- அன்புடன்  புன்னகை
answered May 2, 2013 by Chester (1,152 points)
+1 vote
பிரிதுயர்:
வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன
குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும்
வன்மம் கொண்டலைகின்றதது
ஒரு சிணுங்கள்கலோடு
ஒரு முத்தத்தோடு
ஒரு பொய்க்கிள்ளுதோடு
ஒற்றைப்புருவம் உயர்த்திய கோபத்தோடு
மென் மார்புகளின் வெம்மையோடு
இப்போதும் என்னுள் இருப்பதாய்
உணரும் ஒவ்வொரு கணத்திலும்
கசங்கிய புன்னகையை வலியுடன்
தவழவிடும் என் உதடுகளை
எதைக்கொண்டு மறைப்பது?
answered May 2, 2013 by Ramesh Rambi (3,496 points)
0 votes
அம்மாவுக்கு என்று தனி கவிதை வேண்டாம் .........அன்பாக பழகி பார் அம்மாவே கவிதை தான்
answered May 3, 2013 by Ramesh Rambi (3,496 points)
0 votes
மனுஷ்ய புத்திரன் அவர்களின் கவிதை

ரகசிய இடம்
 
இந்த காங்க்ரீட் தளத்தில்
ஓரிடத்தில் பிடுங்கினால்
இன்னொரு இடத்தில்
பிடிவாதமாய்
முளைத்து வரும்
என் சின்னஞ் சிறு தளிரே
 
உன் ரகசிய விதைகளை
முளைக்க வைக்கும்
ரகசிய விதிகளை
நீ யாரும் பார்க்காமல்
ஒளித்துவைத்திருக்கும்
அதே இடத்தில்தான்
நானும் மறைத்து வைத்திருக்கிறேன்
நம் இருவருக்குமான
ஒரு மழைக்கால குறிப்பை
மேலும்
எப்போதும் பற்றிக்கொள்ள போராடும்
ஒரு பரிதவிப்பின் துயரத்தை

--மனுஷ்ய புத்திரன்
answered May 4, 2013 by rradhac (2,658 points)
0 votes
அப்பா:
----------
என்னை
தன் வயிற்றினில்
10 மாதங்கள்
சுமந்தால் அம்மா
தன் தோளிலும்
நெஞ்சிலும்
அம்மாவையும்
சேர்த்தே சுமந்தார் அப்பா...
answered May 8, 2013 by anjvelu (3,018 points)
0 votes

காதல் ஒரு புது மழை
நனைய நனைய சந்தோஷம்
நனைந்தபின் ஜலதோஷம்
காதல் ஒரு தீபம்
சிலருக்கு நெருப்பு
பலருக்கு கொள்ளி.
..................................... யாரோ சொன்னது, நானும் சொல்கிறேன்.

answered Jan 14, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...