தேவதைகளின் தேவதை:
---------------------------------
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்.....
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்:
--------------------------------------------------------
நான் எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே… வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்?
அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன. உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன.
நீ சாய்வதற்கென்றே வைத்திருக்கும் என்
தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்
பயணத்தில்.
முதல்முறையாக ஒருமுறை உன் மடியில்
படுத்து நான் அழுதுவிட்ட போது…ஏன்
என்று கேட்டாய். அதெல்லாம் எனக்குத்
தெரியாது. ஆனால் யார் மடியிலாவது படுத்து
அழவேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை,
அது உன் மடியாயிற்று. அவ்வளவுதான்.
நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது
நீதானா? தொடப்போனால்
சினுங்குவதில்லையே… நீயா? முத்தம்
கேட்டால் வெட்கம் தருவதில்லையே…
நீயா? கவிதை சொன்னால் நெஞ்சில்
சாய்வதில்லையே …நீயா? எவ்வளவு
அருகிலிருந்தும் அந்த வாசனையில்லையே…
நீயா? வேண்டாம். நீயே வைத்துக்கொள்.
புகைப்படத்திலெல்லாம் நீ இருக்க முடியாது.
நாள் முழுவதும் கூந்தலிலிருந்த
பூவை
எந்த சலனமுமுன்றி
எடுத்தெறிந்துவிட்டு
வேறு பூவை சூட்டிக்கொள்ள
எப்படி முடிகிறது
இந்தப் பெண்களால்?
- தபூ சங்கர்