• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

இலக்கியத்தில் சேரி என்றால் என்ன?

0 votes

இலக்கியத்தில் சேரி என்றால் என்ன?

asked Apr 11, 2014 in பொது by parthiban (15,490 points)
   

2 Answers

+1 vote

கடல்கரை ஓரங்களில் வாழும் மக்கள், மீனவர்கள் வசிக்கும் பகுதி.

answered Apr 12, 2014 by veeramani (6,006 points)
0 votes

மக்கள் சேர்ந்து வாழுமிடம் "சேரி" எனக் காரணப்பெயராக வழங்கியிருக்கிறது. இச்சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளது. முல்லை நிலத்து ஊர்கள் சேரி எனப்பட்டன என்கிறார் நச்சினார்க்கினியர். ஆனால் ஊரின் புறத்தே உள்ள குடியிருப்புகளையும் சுட்டி வழங்கியிருக்கின்றது. பார்ப்பனச் சேரி, இடையச்சேரி என்றார் போல மக்கட் பிரிவினரின் பெயர்களுடனும் சேர்ந்து சங்க இலக்கியத்திலும் வழங்கியிருக்கின்றது.

இப்பொதுக்கூறு இந்நாளில் தாழ்த்தப்பட்டவர் என்று அழைக்கப்பெறும் பள்ளர், பறையர், சக்கிலியர் முதலான சாதியினரின் குடியிருப்பிடங்களைக் குறிக்கின்றது. ஆனால் பழந்தமிழில் அவ்வாறு வழங்கவில்லை என்கிறார் சின்.கோதில்மொழியன். எனினும் 10 ஆம் நூற்றாண்டில் தீண்டாச்சேரி, பறையர்சேரி போன்ற இருப்பிடங்கள் குறிப்பிடப்படுகின்றன.ஊரின் புறத்தே உள்ள குடியிருப்புக்கள் இவ்வாறு கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

answered Apr 25, 2014 by stranger012 (4,170 points)
...