• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

இளநீரின் பயன்கள் என்ன?

+3 votes
asked Apr 18, 2013 in இயற்கை உணவு by parthiban (15,490 points)
   

1 Answer

+1 vote
 
Best answer
இயற்கையின் கொடையான இளநீரில் பல்வேறு நன்மைகள் உள்ளன. வெயில் காலத்துக்கு ஏற்ற இளநீர் உடலில் உள்ள வெப்பதை தணித்து  குளிர்ச்சியைத் தருகிறது. சத்து மிகுந்த இந்த இளநீரில் அதிகளவில் பொட்டாசியம், மினரல் உள்ளது. களைப்பை போக்கி சுறுசுறுப்பை தரக்கூடியது.

செரிமான சக்தி கொண்டது.  சத்து மிகுந்த இந்த இளநீரை அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும்  30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளது தான் காரணம். இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசைகளுக்கும் ஒருவிதப்  புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடுகின்றன. காலையில் இளநீர் சாப்பிடுவது மிக மிக ஆரோக்கியமான பானமாகும்.

உடலுக்குச் சத்தும் தந்து ஊக்கமும் தரும் இனிய இயற்கை மருந்து. சிறுநீரில்  கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது. இதனால் தான் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மற்றும் மஞ்சள் காமாலை நோயாளிகளின்  சூட்டால் வெளியாகும் மஞ்சள் நிற சிறுநீரை மாற்றவும் இளநீர் தவறாமல் அருந்தச் சொல்லுகிறார்கள். இதில் கொழுப்பு இல்லை. சர்க்கரையை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. கேன்சர் வராமல் தடுக்கிறது.
answered Apr 18, 2013 by Ramesh Rambi (3,496 points)
selected Apr 18, 2013 by parthiban
...