• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

கலைஞரின் காமெடி

0 votes

சென்னையில் ஞாயிற்றுக் கிழமை நடந்த சண்முகநாதன் இல்லத் திருமண விழாவில் கருணாநிதி, ‘‘நான் நடத்தி முடித்தது தமிழ்த் திருமணம். மணமக்கள் பெயர் விக்ரம், நிஷாந்தி. முடிந்தவரை தமிழுக்கு ஏற்றம் தரும் அளவுக்கு நாம் நடந்துகொள்ள வேண்டும். இப்போது விட்டுவிட்டால் தமிழைக் காப்பாற்ற, தமிழுக்கு நேரும் ஆபத்துக்களை தடுத்து நிறுத்த யாருமே இருக்க மாட்டார்கள். எதிர்காலத்திலே தமிழ் இருக்குமா என்ற கேள்வியோடு, இன்றைக்கும் நாம் இருக்கின்றோம். ஏனென்றால் அப்படிப்பட்ட புயல் இந்தியாவிலே வீசி, அது தென்னகத்திலே தவழ்ந்து, தமிழகத்திலும் புயலாக மாறியிருக்கிறது, அந்தப் புயலைத் தடுத்து நிறுத்த சண்முகநாதனுக்கு ஒன்றைச் சொல்கிறேன். விக்ரம் என்ற மணமகன் பெயரையும், நிஷாந்தி என்ற மணமகள் பெயரையும், கூடுமான வரை தமிழ்ப் பெயர்களாக மாற்றி, தமிழுக்குப் பெருமை தேடித் தாருங்கள்’’ என்று கூறினார்.

தமிழகம் இந்தியாவில் இல்லை போலும் அட இது பரவாயில்லை ஆனால் ஸ்டாலின், ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன்,சன் டிவி போன்றவை தமிழ் பெயர்களா ?

asked Jun 30, 2014 in திராவிட அரசியல் by parthiban (15,490 points)
   

2 Answers

0 votes

ஆட்சியில் அதிக காலம் இருந்தவர்.ஆட்சியில் இல்லாதபோது தமிழ்மீதும் தமிழ்மக்கள்மீதும் இவருக்கு வரும் அக்கறை ஆட்சியில் இருக்கும் போது வந்திருந்தால்...
மக்கள் ஆட்சியை மாற்றியிருக்கமாட்டார்கள்.
அவரிடம் கேட்டுவிடாதீர்கள்.அவர் சொல்லியிருக்கிறார் மக்கள் ஆட்டுமந்தை என்றும் முட்டாள்கள் என்றும்.
89-ல் அதிமுக இரண்டாக உடைந்த போது ஒரு வாய்ப்பு அடுத்து 91 முதல் 96 வரை அதிமுக ஆட்சி சரியில்லை என்று ஒரு வாய்ப்பு, 2001 முதல் 2006 வரை மதுகடைகளால் பாதிக்கப்பட்ட பெண்களும் டிவி மோகம் கொண்ட பெண்களும் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்கள்,
மக்கள் கொடுக்கும்போது மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் இவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரும்போதுதாவது தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் பிடித்த ஆட்சியை கொடுத்து நிரந்தரமாக தமிழ் சேவை செய்யட்டும்.
மூத்த தலைவர் மதுக்கடைகளை மூட ஒரு வழி சொன்னால்,ஒரு போராட்டாம் அறிவித்தால், போராட்டம் வலுப்பெற்று கேரளாபோல் மதுக்கடைகள் மூட அரசு நடவடிக்கை எடுத்ததால் எத்தனையோ பெண்கள் விதவை ஆவது தடுக்கப்படும். தடுக்கப்படுமா?...

answered Nov 12, 2014 by win552 (72 points)
0 votes

தமிழ்மொழி மிகவும் பழமையானது. உலகில் பல நாடுகளில் பேசப்படுகிறது. சிங்கப்பூரில் 1,50,184 பேரும் இலங்கையில் 40,65,930 பேரும் அலுவலக மொழியாக பேசுகிறார்கள். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 3,79,944 பேரும் புதுசேரியில் 1,244,464 பேரும் தமிழ்நாட்டில் 72,136,958 பேரும் பேசுகிறார்கள். இன்னும் உலகின் பல நாடுகளில் தமிழ் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆக, தமிழில் பெயர் வைத்தால்தான் தமிழை காப்பாற்ற முடியும் என்பதெல்லாம் கிடையாது. தமிழை காரணம் காட்டி தமிழனை அடிமைப்படுத்தும் எண்ணம் இனியும் வேண்டாம். தமிழனை யாரும் நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது. நன்றி.

answered May 24, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...