• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

இது உண்மையா?

0 votes

கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாதுனு சொல்றாங்க? இது உண்மையா?

asked Aug 6, 2014 in பொது by anjvelu (3,018 points)
   

1 Answer

+1 vote

ஆம்,கோழி இறைச்சி சாப்பிட்டால் நோய் குணமாகாது என்று விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) தெரிவித்துள்ளது.

சி.எஸ்.இ, கோழி இறைச்சிப் பற்றி இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் கோழி இறைச்சியில், அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கறிக் கோழிகள் வேகமாக வளர அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் கொடுக்கப்படுகிறது. இதனால் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய் கூறுகள் தோன்றுகின்றன.

தொடர் காய்ச்சல் மற்றும் தொடர் நோயிற்கு ஆன்ட்டி பயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால், கறிக்கோழியில் அதிகம் ஆனட்டி பயாடிக் செலுத்தப்படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் ஆன்ட்டி பயாடிக்கினால் குணப்படுத்த கூடிய நோய்களையும் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், அந்த மருந்துகள் நம் உடலில் அளவுக்கு அதிகமாகி, வேலை செய்யாமல் விரயமாகி விடுகிறது.

ஆன்ட்டிபயாடிக் பயன்பாடுகள் மனித, மருத்துவப் பயன்பாடுகளையும் மீறிச் சென்றுள்ளது. கால்நடை வளர்ப்பு தொழிற்துறையினர் கோழிகள் எடை கூடுவதற்கும், வேகமாக வளர்வதற்கும் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயனபடுத்துகின்றனர் என்ற, அதிர்ச்சியான தகவலை சி.எஸ்.இ வெளியிட்டுள்ளது.

answered Aug 6, 2014 by parthiban (15,490 points)
...