• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

white beard in young age

0 votes

I am 25 years old. My beard start getting white.pls tell me reason for that and how to solve this.and which food is best.

asked Jan 5, 2015 in இயற்கை உணவு by mahesh17588 (60 points)
   

1 Answer

0 votes

பெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு வெள்ளை முடிசிறுவயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால், அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.

உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தாலும், முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத்தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.

வெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல், அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக சுரந்தாலும், வெள்ளை முடி வந்துவிடும்.

பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரேமுடிகள், அதிக மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணத்தினாலும், வெள்ளை முடிகள் வருகின்றன. இதனை அனைத்து அழகியல் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு, ஆரோக்கியமான, மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால், வெள்ளை முடி வருவதைத் தடுக்கலாம்.

வெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின்மீது மேற் கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இருப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியைவிட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண் டறியப்பட்டுள்ளது. ஆகவே சிகரெட் பிடிக்காமல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப் போடலாம் என்றும் கூறுகின்றனர்.

answered Mar 30, 2015 by parthiban (15,490 points)
...