• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

மனிதர்கள் எப்பொழுது சமைத்து சாப்பிட்டார்கள்?

0 votes
asked Jan 11, 2016 in எப்பொழுது? by kumaran (150 points)
   

1 Answer

0 votes

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று அறிவியல் சொல்கிறது. 2.3 மில்லியன் வருடங்களுக்கு முன் காட்டு மிருகங்களை வேட்டையாடி மிருக மாமிசத்தை அப்படியே உண்டு வந்த குரங்கு மனிதன் காட்டு மிருகங்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அவனது கண்டுபிடிப்புகளில் முக்கியமானது நெருப்பு. சிக்கி முக்கி கல்லை உராய்த்ததன் மூலம் உருவானது நெருப்பு பொறி. நெருப்பு பொறியை காய்ந்த இலைகள், சருகுகள் கொண்டு தொடர்ந்து எரியவிட்டான். நெருப்புடன் பழகிய காட்டு மனிதன் காட்டு மிருகங்களிடமிருந்தும் கடுமையான குளிரிலிருந்தும் காத்துக்கொள்ள நெருப்பை எரியவிட்டு சுற்றிலும் உட்கார்ந்து குளிர் காயிந்து கொண்டான். ஒருவனுக்கு கிடைத்த மிருகத்தின் உடலை மிருகக்குனம் கொண்ட குரங்கு மனிதன் மற்ற குரங்கு மனிதனிடம் சண்டையிட்டு பிடினங்கி தன் பசியாற்றிக்கொண்டான். அந்த நிகழ்வில் எரிந்துக்கொண்டிருந்த நெருப்பில் கை தவறி விழுந்த கறித்துண்டு குரங்கு மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்லானது. பச்சையாக உண்டுவந்த மிருகமாமிசம் அதன் சுவை, நெருப்பில் விழுந்துந்ததை உண்ட சுவை இந்த இரண்டையும் பகுக்கும் மனிதனின் சுவை நரம்புகள் மிருக மாமிசத்தை நெருப்பில் போட்டு சாப்பிட ஆரம்பித்தது. உணவில் ஏற்பட்ட மாற்றம் குரங்கு மனிதனின் மூளை தன் செயல் திறனை அதிகப்படுத்தியது. தன் வாழ்வின் முன்னேற்றங்ககளை படிப்படியாக அதிகப்படுத்தியது. பல்லாயிரங்கள் வருடங்கள் கடந்து வந்த மனிதன் உணவினை வெவேறு முறைகளில் சமைக்க கற்றுக்கொண்டான்.

answered Jan 15, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...