• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

நீதி கதைகள்

0 votes

திருடர்கள் மூன்று பேர் சேர்ந்து திருடுவது வழக்கம். ஒரே இடத்தில் திருடாமல் வெவ்வேறு இடங்களில் திருடியதை ஓர் இடத்தில் முவரும் சமமாக பங்கு போட்டுக்கொள்வார்கள். ஆனால் எல்லா பொருட்களையும் ஒரு இடத்தில் பத்திரபடுத்தி வைப்பார்கள். ஒற்றுமையாக இருந்த அவர்களுக்குள் பொறாமை வளர ஆரம்பித்தது. ஒரு நாள் உணவு உன்ன மதிய நேரத்தில், "இனி நாம் தனித்தனியாக திருடி தனியாக வைத்துக்கொள்வோம்" என முடிவெடுத்தனர். இன்று உண்ணும் மதிய உணவுக்குப்பின் தனித்தனியே செல்லலாம் என்றும் ஒருவன் உணவை தேடியும் ஒருவன் தண்ணீர் தேடியும் ஒருவன் பொருளுக்கு பாதுகாப்பாகவும் இருக்க முடிவெடுத்தனர். பொருளை பார்த்துக்கொண்டிருந்தவன் மனதில் உணவுக்குப்பின் இருவரையும் கொன்றுவிடவும், தண்ணீரில் விஷம் கலந்தவன் தண்ணீர் குடிக்காமல் சாப்பிடவும், உணவில் விஷம் கலந்தவன் சிறிதுநேரம் கழித்து சாப்பிடுவதாகவும் முடிவேடுதானர். தண்ணீர் கொண்டு வந்தவனும் பாதுகாப்பில் இருந்தவனும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். உணவை கொண்டுவந்தவனை கொன்றுவிட்டால் இருப்பதை இருவரும் சமமாக பங்குபோட்டுக்கொள்ளலாம் என்று காத்திருந்தனர். ஆனால் ஒருவனை கொன்றப்பின் தண்ணீர் குடிக்காமல் உணவை உன்ன முடிவெடுத்தவன் தண்ணீர் குடித்து இவனும் இறந்து விட்டால் முழுவதும் நமக்குதான் என்று நினைத்தவனுக்கு உணவில் விஷம் இருப்பது தெரியாதே. இருவரும் மறைந்திருந்து உணவை கொண்டுவந்தவனை தாக்கி கொன்றனர். பிறகு உணவை இருவரும் பங்குபோட்டு உன்ன ஆரம்பித்தனர். தண்ணீர் குடிக்காமலும், உணவில் இருந்த விஷம் அறியாமலும் இருவரும் ஒருவருக்குப்பின் ஒருவராக் மண்ணில் சாய்ந்தனர்.

asked Feb 9, 2016 in நீதி கதைகள் by PARTHIBAN.G (1,540 points)
   

2 Answers

0 votes

ஒரு நாட்டை பஞ்சமின்றி மக்கள் நிம்மதியாக வாழும்படியாக ஒரு அரசன் ஆண்டு வந்தான். அரசனுக்கு தன வாழ்நாளில் மக்களை நிம்மதியாக பார்த்துகொண்டவனுக்கு தன மறைவுக்குப்பின்னும் மக்கள் நலமாக வாழும்படியாக எல்லா திட்டங்களையும் செய்துவைத்தான். உலகத்தில் உள்ள அணைத்து புத்தகங்களையும் வாழ்நாளில் படித்து முடித்துவிட எண்ணினான். அமைச்சர்கள் ஆலோசனைக்கு ஏற்ப அனைத்து புத்தகங்களையும் கொண்டுவர செய்தான். ஆனால் வயது ஏறிக்கொண்டே சென்றதில் கண்கள் சரிவர தெரியாமல் போனது. எனினும் புலவர்களை கொண்டு கருத்துகளை மட்டும் சொல்லும்படி ஆணையிட்டான். அணைத்து புத்தகங்களையும் நூற்றுக்கனக்கில் சுருக்கி விளக்க புலவர்கள் அரசனிடம் முறையிட்டனர். அப்பொழுது அரசன் மரணபடுக்கையில் இருந்தான். அந்த புத்தகங்களையும் சுருக்கி விளக்கும்படி அரசன் அணையிட அவ்வாறே புலவர்கள் சுருக்கி ஒரு புத்தகமாக வடிவமைத்தனர். இன்னும் சிலமணிநேரம் கழித்து அரசர் இறந்து விடுவார். ஒரு புத்தகம் படித்து விளக்க நேரமில்லை. ஒரு பக்கமாக கொண்டுவாருங்கள் என அரசவை மருத்துவர் சொல்ல அதுவும் ஓரிரு மணி நேரத்தில் தயாரானது.அரசர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார். ஒரு வாக்கியம்னாக சுருக்கி விளக்கும்படி அமைய, கடைசி மணித்துளியில் அரசர் காதில் "அறியவேண்டிய தகவலை உரிய நேரத்தில் பெற்றுவிட வேண்டும். காலம் தாழ்த்தி அறிய முற்பட்டால் அதனை பெற முடியாது." என்று சொல்லிமுடிக்கும்போது அரசரின் உயிர் பிரிந்தது.

answered Feb 15, 2016 by PARTHIBAN.G (1,540 points)
0 votes

தென்னாலி ராமன் கதைகளில் எனக்கு பிடித்ததில் ஒன்று இது. கோடைகாலம் அது. ராமன் ஒருமுறை அரசருடன் அந்தபுற தோட்டத்திற்கு சென்றுந்தான். அங்கு இருக்கும் மலர்களையும், காய்கறி மற்றும் கனிகளையும் கவனித்தான். அதில் கத்தரிகாயும் இருந்தது. அதன் சுவையும் அறிவான். அனால் பரித்துவிட்டால் தன தலை துண்டிக்கப்பட்டுவிடும் என்பதையும் அறிவான். எனினும் அதனை கைவிட மனமில்லை. மனதினுள் திட்டம் தீட்டினான். இன்று இரவே நிறவேற்றிவிடவும் முடிவு செய்தான். தினமும் தோட்டத்தில் இருக்கும் எல்லாவகையான மலர்களும், காய்களும், கனிகளும் கணக்கு பார்த்து பதிவு செய்வதும் வாரத்திற்கு ஒருமுறை அரசரிடம் முறையிடுவதும் வழக்கம்.

மறுநாள் ராமன் அரசரிடம் கத்தரிகாயை பரிதுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டான். ராமனின் விளக்கங்கள் எதுவும் அரசரால் உறுதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ராமன் பொய் சொல்வதாகவும் உண்மை நிலையை அறிய ராமனின் மகனை அழைத்து வரும்படி ஆணையிடப்பட்டது. ராமனுக்கு சங்கடமான நிலைமை ஏற்ப்பட்டு அது அவனின் முகத்தில் வெளிப்பட்டது. அதனை அரசவையில் அனைவரும் பார்த்தனர். அரசரும் பார்த்தார்.

அரசர் முன் குற்றவாளியாக தன தந்தை நிற்பதை பார்த்த மகன் எப்படியும் ராமனை காப்பற்றிவிடுவான் என அறிந்த அரசர், தெனாலி ராமனின் மகன் உள்ளே வருவதற்கு முன் மகனை தனியறையில் விசாரித்துவிட்டு அதன் பிறகு முடிவெடுக்க எண்ணினார். நேற்று இரவு உறங்குவதற்கு முன் என்ன நடந்தது?, என்ன சாப்பிட்டாய்?. என்ற கேள்விக்கு ஒன்றுவிடாமல் மகன் கூறினான்.

" ஐயா, நேற்று மாலை நான் விளையாடிய காரணத்தால் தின்னையிளியே பொழுதோடு உறங்கிவிட்டேன். அப்பொழுது மழை வந்தது. எனது தந்தை என்னை எழுப்பி உள்ளே அழைத்துச்சென்றார். எனது தாய் உனைவு கொடுத்தார். கத்தரிக்காய் குழம்பு என்று சொன்னார். மிகவும் சுவையாக இருந்தது. எனது வாழ்வில் அந்த சுவையை நேற்று இரவுதான் அறிந்தேன். பிறகு உறங்கிவிட்டேன்."

சபையோருக்கு குழப்பமாக இருந்தது. நேற்று இரவு மழை எப்போது வந்தது. கண்டிப்பாக குழ்ந்தை பொய் சொல்லமாட்டான். தவறு வேறு எங்கேயோ உள்ளது. அது தெனாலியிடம் இல்லை. ராமன் குற்றமட்டவன் என விடுதலை செய்யப்பட்டான். உண்மையில் நேற்று என்ன நடந்தது என்றால், மழை மட்டும் வரவில்லை. மாறாக, ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தன் மகனை எழுப்ப, மழை வருவதாக அவன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. பிறகு வேறு உடை மாற்றப்பட்டது. அந்தபுரத்து கத்தரிக்காயும் கொடுக்கப்பட்டது. இந்த செயலே ராமன் குற்றமட்டவன் என நிரூபிக்கப்பட்டது.

நீதி : தவறு செய்தாலும் தப்பிக்கவும் தெரியவேண்டும். நல்ல செயல்களுக்காக. நன்றி.

answered Feb 22, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...