• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

அரசரின் அறியாமை.

0 votes

அரசரின் அறியாமை.

asked Apr 4, 2016 in தெனாலி ராமன் கதைகள் by PARTHIBAN.G (1,540 points)
   

1 Answer

0 votes
 
Best answer

ஒருமுறை கிருஷ்ணதேவராயர் அரசவையில் பெரும் விவாதம் ஒன்று நடந்தது. விவாதத்தின் தலைப்பு: "வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருள் தேவை என்றால் எந்த ஒரு வேலை என்றாலும் சமாளிப்பான்." அரசருக்கு தெனாலியின் பதில் தேவை என்பதால் கடைசியாக தேனாளியிடமே பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. வறுமையில் வாடும் ஒருவரை தேடி அழைத்துவந்தான் தென்னாலி. போட்டிக்கான நாளும், விதிமுறையும் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
போட்டி என்னவென்றால் "தன வறுமை நீங்கி செல்வசெளிப்புடன் வாழ அவன் கடுங்குளிரில் தொடர்ந்து இடுப்பளவு நீரில் நிற்க வேண்டும். அவ்வாறு போட்டியில் வென்றுவிட்டால் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பதுதான். அன்று இரவு மார்கழி மாதம். அரண்மனைக்கு சற்று தூரத்தில் அமையப்பெற்ற குளத்தில் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணிவரை தொடர்ந்து நிற்க வேண்டும். "ஏழை ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தென்னாலியால் ஊக்கப்படுத்தப்பட்டு ஒப்புக்கொண்டான்.
பொழுது விடிந்து பரிசுக்காக அரண்மனைக்குள் சென்றவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விவரத்தை அறிந்த தெனாலி அரசவையில் என்ன நடந்தது என்று எழையிடம் கேட்க, "பரிசுப்பொருளை கொடுக்கும்போது கொடுக்கும்போது அரசர் என்னிடம், எவ்வாறு அந்த கடுங்குளிரில் உன்னால் பொழுதை கழிக்க முடிந்தது?" என்று வினவ, நான் அவரிடம், "அரசே, மிகவும் வேதனையாகத்தான் இருந்தது. இருப்பினும் என் எதிர்காலத்தை நினைத்துப்பார்க்கையில் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல் தங்களின் அரண்மனை முழுவதும் ஒளிரும் விளக்குகள், அதனால் மாளிகையின் அழகு, அத்துடன் நேற்று பௌர்ணமி என்பதால் அந்த முழுநிலவு, இவை எல்லாவற்றையும் என்மனதில் நான் அமைத்துக்கொண்ட சிறிது கற்பனை, பொழுது போனதே தெரியவில்லை அரசே." என்றேன். உடனே அவையில் இருந்த ஒருவர் அரசரிடம். "அரசே இவன் பொய் சொல்கிறான். கற்பனை என்கிறான். எம்மற்றுகிறான். நேற்று பௌர்னமி என்பதாலும் அரண்மனை விளக்குகள் முலமும் இவன் குளிர் காய்ந்துவிட்டு பரிசுப்பொருளை தட்டி செல்லநினைக்கிறான்." என்று பரிசு கொடுக்க விடாமல் தடுத்து விட்டார்.
தெனாலி எழையிடம் உறுதி அளித்தான். ஒருவார இடைவெளியில் அரசரின் கவனத்திற்கு செல்லும்படியாய் ஒரு வேலையை தெனாலி செய்தான். அது அரசரின் நேரடிகவனத்திர்க்கு வந்தது. அவையில் இருந்த அனைவரும் நகைத்தனர். தெனாலிக்கு புத்தி கெட்டுவிட்டது. இனி அவைக்கும் தேனாளிக்கும் ஒரு சம்பந்தமும்மில்லை என என்னியிருந்தவர்களுக்கு தெனாலி விளக்கினான்.
தெனாலி செய்த வேலை:
அன்று இரவு அரசருக்கு உறக்கம் சற்று தாமதமானது. இதை அறிந்த தெனாலி, அரசர் பார்க்கும்படியான ஓர் இடத்தில் முன்று கொம்புகளைக் கொண்டு முக்காலி ஒன்றை அமைத்து அதன் உச்சியில் ஒரு பானையில் தண்ணீரை சுடுபடுத்திக்கொண்டிருந்தான். கீழே நெருப்பு குறைவான உயரத்தில் எரிந்துக்கொண்டிருந்தது. பானைக்கும் நெருப்புக்கும் துளியும் சம்பன்ந்தமில்லை. நீண்ட நேரமாகியும் இந்த செயல் தொடரவே, காவலாயிடம் தெனாலியை அழைக்க மன்னர் ஆணையிட்டார். மன்னரின் படுக்கை அறையை நெருங்கிய தெனாலி தான் செய்யும் வேலையை மன்னரிடம் விளக்கினான். மன்னருக்கு தெனாலியின் மீது கோபமும் பரிதாமமும் வந்தது. இருப்பினும் தான் செய்யும் வேளையில் தவறு சிறுதும் இல்லை என்று தெனாலி வினவ, இப்பொழுது இதுபற்றி தொடர்வதற்கு நேரமில்லை. நாளை அரசவைக்கு வந்து விளக்குமாறு மன்னர் சென்றுவிட்டார். முதல் வேலையாக அரசவையில் தெனாலி ஒரு காமெடியானாக நிற்க்கவைக்கப்பட்டான்.
தெனாலியின் விளக்கம்:
அரசே,
"எரியும் நெருப்புக்கும் நீருள்ள பானைக்கும் ஓர் ஆள் உயர இடைவெளிதான். நான் எனது கையை கொண்டு சோதனை செய்ததில் நெருப்பின் வெப்பம் என்னால் உணர முடிந்தது. நிச்சயம் நீருள்ள பானை சூடு ஏறிவிடும். இதை அவையில் உள்ளோர் அனைவரும் அறிவர். குறிப்பாக மூத்த அமைச்சர் நன்கு அறிவார்."
அரசருக்கு தெனாலியின் விளக்கம் குசப்பமாகவே இருந்தது. மூத்த அமைச்சரும் குசப்பமாகவே, தனக்கு விளங்கவில்லை என்றும் பொருள் விளங்குமாறு சொல்லவும் கேட்க. "அரசே போனவார இறுதியில் ஒரு போட்டி நடந்தது. இடுப்பளவு நீரில் கடுங்குளிரில் நின்றவனுக்கு தங்களின் அரண்மனை விளக்குகள் மற்றும் பௌர்ணமி நிலவின் வெப்பம் குளத்தின் நீரின் குளிரை குறைத்து, அந்த ஏழை செய்த எம்மற்று வேலைக்கு நமது மூத்த அமைச்சர் விளக்கியது தங்களின் நினைவுக்கு கொண்டுவாருங்கள். எனது விளக்கம் நன்றாக விளங்கும்."
அரசர் மூத்த அமைச்சரை பார்க்க, அமைச்சரோ செய்த செயல் எண்ணி வெட்கப்பட்டு தலைகுநிந்துகொண்டார். அரசரும் தன நிலை அறிந்து தெனாலியை பாராட்டி பொன்னும் பொருளும் தேனாளிக்கும் அந்த ஏழைக்கும் வழங்கினார். தனக்கு கிடைத்த பரிசுப்பொருளை தெனாலி அந்த ஏழைக்கு கொடுத்து மகிழ்ந்தான்.

தெனாலியின் கதைகள் புத்தககத்திளிருந்து............
நன்றி.

answered Apr 4, 2016 by PARTHIBAN.G (1,540 points)
selected Apr 12, 2016 by PARTHIBAN.G
...