• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

அ.... ஆ...........

0 votes

அ...... ஆ................

asked Apr 30, 2016 in நீதி கதைகள் by PARTHIBAN.G (1,540 points)
   

1 Answer

0 votes

உலகத்தில் மகா அறிவாளியான ஒரு மகான் வாழ்ந்து வந்தார். அறிவில் சிறந்தவர் அவர், ஆனால் அவரின் முகத்தோற்றம் சற்று முகம் சுழிக்க வைத்தது. இதன் காரணமாக அவரின் திருமண வாழ்க்கை அமையவில்லை. இருப்பினும் அவர் அதைப்பற்றி கவலைகொள்வதாக தெரியவில்லை. தனது தொண்டு உலகை நல்வழிபடுத்த போதுமானது. இதில் பெண் ஒருத்திக்கு இடம் இல்லாமல் இருப்பது நல்லது என எண்ணினார்.
ஆனால் ஒரு பிரச்சினை உருவாகியது. உலக மகா அழகியான ஒரு பெண் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என கேட்டாள். அதற்க்கு அந்த மகான், நானோ அழகில்லாதவன். நீங்களோ உலக அழகி. நமக்குள் திருமண பொருத்தம் எப்படி அமையும் என்றார். அதற்க்கு அந்த அழகி சொன்ன காரணம்:
" எனது அழகிலும் உங்கள் அறிவிலும் இணைந்து ஒரு குழ்ந்தை இந்த உலகத்திற்கு கொடுக்கலாம் அல்லவா? என்று தனது அறிவிற்கு எட்டியவாறு அந்த அழகி முடிக்க, அந்த மகான் தொடர்ந்தார். " நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எனது கருத்தையும் பரிசிலினை செய்துவிட்டு உங்கள் முடிவினை சொல்லுங்கள் " என்றதும் எந்த சிக்கலானாலும் இந்த மகா அறிவாளியை கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று அழகி காத்திருந்தார்.
அந்த மகான் சொன்ன பதில்.:
"உங்கள் அழகிலும் எனது அறிவிலும் இந்த உலகத்திற்கு ஒரு குழந்தையை கொடுப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனால் கடவுளின் படைப்பான எனது முக அமைப்பிலும் உங்கள் அறிவிலும் படைக்கபெற்ற அக்குழந்தை இங்கு துன்பப்பட வேண்டுமா???? சிறிது சிந்தியுங்கள். பிறகு எனை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று முடித்ததும் அந்த அழகி அவரிடம் மன்னிப்பு கேட்டு விடைப்பெற்றார் .
.........................சிறுவயதில் கேட்ட கதை. நன்றி.....

answered Apr 30, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...