• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

வேப்பம்புண்ணாக்கு என்றால் என்ன?

0 votes

வேப்பம்புண்ணாக்கு என்றால் என்ன? இதை தோட்டத்தில் எப்படி பயன்படுத்துவது?

asked Dec 18, 2017 in வீட்டுத் தோட்டம் by parthiban (15,490 points)
   

1 Answer

0 votes

‘‘காகம் வேப்பம் பழத்தை உட்கொண்டு எச்சமிடும் போது, பழத்தின் வழவழப்பு, மேல் தோலெல்லாம் நீங்கி, விதை மட்டும் தனியாகக் கிடைக்கும். இதுபோல இருக்கும் எல்லா விதைகளையும் ‘காக்கா முத்து’ எனச் சொல்கிறோம். நல்ல தரமான 50 கிலோ காக்கா முத்தினை உடைத்தால், 22 கிலோ பருப்பு கிடைக்கும். 22 கிலோ பருப்பை குளிர்முறையில் சூடே இல்லாமல் ஆட்டினால், 8.5 லிட்டர் நயம் வேப்பெண்ணெய், 12 கிலோ நயம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவை கிடைக்கும். வேப்பெண்ணெயில் ‘அசாடிராக்டின்’ எனும் வேதிப்பொருளும் நிம்பின், நிம்பிடின், கலானின் ஆகியவையும் இருக்கின்றன. வேப்பெண்ணெய் எளிதில் நீரில் கரையாது. ஆனால், ஜப்பானிலிருந்து பெறப்பட்ட இயற்கை உத்தியின் மூலம் தண்ணீரில் எளிதில் கரையும் வேப்பெண்ணெய் தயாரித்து விற்பனை செய்கிறோம்.

பூச்சிகளை சமாளிக்க!

விளைச்சலைப் பாதிக்கும் பூச்சிகளைக் கொல்ல 1 லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லியும், புழுக்களைக் கொல்ல 1 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லியும் கலந்து தெளித்தால் போதும். புழுக்களுக்கே உரிய தோலுரிக்கும் தன்மையைக் கெடுத்து, வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்படுத்தி, புழுக்களை கொல்லும் வேலையை இது செய்யும். பூஞ்சணக்கொல்லியாகவும், பாக்டீரீயா கொல்லியாகவும், வைரஸ் எதிரியா கவும் பயன்படுகிறது. ‘மல்பரி’ பயிரைத் தவிர எல்லாவிதமான பயிருக்கும் ஏற்ற ஒரே மருந்து வேப்பெண்ணெய்தான்.

புண்ணாக்கின் அதிசய குணம்!

வேப்பம் புண்ணாக்கு என்பது நிலத்தைத் திருத்துவதற்கான அருமை யான ஆயுதம். இது நல்லதொரு இயற்கை உரமும் கூட! மண்ணிலி ருக்கும் மண்புழுக்களை கொல் லாமல் வேர்ப்புழுக்களை அழிக்கும் குணமுடையது. அனைத்துப் பயிர்களுக்கும் ஏற்றது.

ரசாயன முறையில் விவசாயம் செய்பவர்களும் வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்துகின்றனர். நெல்லுக்கு அடியுரமாக யூரியா இடும்போது அதிலுள்ள தழைச்சத்து விரைவில் தண்ணீரில், கரைந்தும், ஆவியாகியும் வீணாகிறது. 100 கிலோ யூரியாவுடன் உருகிய ‘தார்’ ஒன்றரை கிலோ, நன்கு உடைத்து தூளாக்கிய வேப்பம் புண்ணாக்கு 20 கிலோ ஆகியவற்றைக் கலந்து 12 மணி நேரம் வைத்து பின்னர் வயலுக்குத் தெளித்தால் தழைச்சத்து நிலைத்து நின்று சிறுசிறுக பயிருக்கு கிடைக்கின்றது. 25 - 50% தழைச்சத்து வீணாவதும் தடுக்கப்படுகின்றது. இதற்காக வேப்பம் புண்ணாக்கு பயன்படுகிறது

answered Dec 21, 2017 by premalatha (2,494 points)
...