• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

சித்த மருத்தவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்

+2 votes
மூலிகை செடிகளும் அதன் பயன்களும்
asked May 14, 2013 in சித்தமருத்துவம் by தமிழன் (6,854 points)
   

1 Answer

+1 vote
கற்றாழை:
சோற்றுக்கற்றாழையில் உள்ள மருத்துவப் பொருள்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுபொருள்களை நீக்கி புதிய செல்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.
2.மது அருந்துவதன் மூலம் உடலில் தங்கும் ஆல்கஹாலை ஆக்ஸிஜனேற்றம் செய்து வெளியேற்ற சோற்று கற்றாழை மூலிகை பொருளாக பயன்படுகிறது.
3.இவ்மூலிகைப் பயிரின் இலைகளில் வழவழப்பாக உள்ள களியை (gel) தினமும் 2-3 சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று ஆராய்ச்சி முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
4.மனிதர்களுக்கு காமா மற்றும் புறஊதா கதிர்கள் மூலம் உன்டாகும் தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
5. உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களை குணப்படுத்தவும், அதன் தழும்புகளை நீக்கவும்  பயன்படுகிறது.
6.சோற்றுக்கற்றாழையிலிருந்து பெறப்படும் திரவ பானங்கள் சுவாச நோய்களை குணப்படுத்த உதவுகிறது.


கீழாநெல்லி:
மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும் வீக்கம், கட்டி, ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும். தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

வெள்ளரி:
வெள்ளரியில் உள்ள நீர் சத்து நா வரட்சியைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கும். உடம்புக்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணும்.வெள்ளரியில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் இதில் உண்டு .இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகம் உண்டு. ஈரல், கல்லீரல் சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும். செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும். வெள்ளிரியை உண்பதால் 'பசிரசம்' எனும் ஜீரண நீர் சுரக்கிறது என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைக் குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளிரிக்கு உண்டு. வெள்ளிரிப் பிஞ்சை உட்கொண்டால் மூன்று தோசமும் போகும் என்று பழைய வைத்திய நூல்கள் கூறுகின்றன. புகை பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரளிக்கின்றது .அதையும் போக்க வல்லது. மூளைக்குக் கபால சூட்டைத் தணித்து குளிர்ச்சியூட்டி புத்துணர்ச்சி தரும். கபம், இருமல் நுரையீரல் தொல்லையுள்ளவர்கள் வெள்ளரி சாப்பிடுவது நல்லதல்ல. 100 கிராம் வெள்ளரியில் 18 கிராம் கலோரிதான் இருக்கிறது. குறைந்த கலோரி உள்ள காய்கறியாகும். இது சிறுநீர் பிரிவைத் தூண்டக் கூடியது. இரைப் பையில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தும்.

பேசில் துளசி:
பேசில் முக்கிய இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மூலிகைச் செடி.(Natural anti-inflammatory). இது சமையலில் பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. பேசியல் இரத்த ஓட்டத்தைச சமநிலையில் வைத்துக் கொள்ளும் தன்மையுடையது. இரத்தத்தில் சர்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது. உடலின் சூட்டைத் தணிக்க வல்லது. இது மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தீர்க்க வல்லது. தோல் வியாதிகளைப் போக்க வல்லது. இதன் எண்ணெய் புற்று நோயைக் குணப்படுத்தும். இதில் “’CINNAMANIC ACID”  என்ற அமிலம் உள்ளது. இது இந்த நோயைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது.  இது முகப்பருவை குணமாக்கும். பேசில் மனிதனுக்கு உயிருடன் இருக்க உதவும் தோழன். இது பெண்களுக்குள்ள மலட்டுத் தன்மையைப் போக்க வல்லது. சர்கரை வியாதியைக் குணப்படுத்தும். மூச்சுக் குழலில் ஏற்படும் மூச்சுத்திணரலைக் குணப்படுத்தும். இது ஒவ்வாமையை குணப்படுத்தும். ஆண்களுக்கேற்படும் மலட்டுத் தன்மையைக் குணப்படுத்தும். பேசிலில் உள்ள CINNAMANIC ACID  இரத்தத்தில் உள்ள சர்க்கரையைப் போக்கி இரத்த நாணங்களை சம நிலைப்படுத்தி மூச்சுக்குழல் பாதை மற்றும் நுரையீரலைச் சீராக்குகிறது.. பேசில் எண்ணெயாகப் பயன் படுத்தும் போது மிகவும் உயர்ந்த ANTIOXIDANTS கப் பயன்படுகிறது. இது புற்று நோயின் போது உடம்பின் தோலில் உள்ள செல்கள் இறுதியாக அழிவிற்குப் போவதைத் தடுத்துப் புது செல்களை உருவாக்க வல்லது. பேசியல் நமது உடல் ஆரோக்கியத்தை நல்ல முறையில் வைத்துக் கொள்ளப் பயன்படுகிறது. தற்கால விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் இந்த “ANTIOXDANT” ஆற்றல் உடல் ஆரோக்கியத்தில் உடலின் சக்தி ஆற்றல்களைத் தூண்டும் ஊன்று கோலாக (a great health boost for our immune systems) உள்ளதாக அறிந்துள்ளனர். இலைகள் காயங்களைக் குணப்படுத்தும். வைரஸ் காச்சில், புளு காச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

அருவதா:
இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவரத்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.
சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய வற்றால் விளைகின்ற சுரம்,கரைபேதி, கபவனம், பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.

அழிஞ்சில்:
நோய் நீக்கி, உடல் தேற்றுதல். வாந்தி உண்டு பண்ணுதல். பித்த நீர் சுரப்பை மிகுத்தல், வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணமுடையது. அழஞ்சிலில் செய்யப்படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி, வயிற்றுப் போக்கு, வியர்வை ஆகியவை உண்டாகும். நீடித்துச் சாப்பிட வேண்டுமாயின் இடையிடையே ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம்.

அஸ்வகந்தா:
இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

ஆடாதோடை:
ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

ஆவாரை:
ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

இசப்கோல்:இசப்கோல் விதைகள் குடல்புண், மலச்சிக்கலை நீக்கப் பயன்படுகிறது. மேல்தோல் வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறுகள் நீக்கப் பயன்படுகிறது. தொண்டை மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்த, தேனுடன் உபயோகப்படுத்தப்படுகிறது. இம்மூலிகைச் சாயங்கள், அச்சு ஐஸ்கிரீம் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. தோல் நீக்கப்பட்ட விதைகளில் 17-19 சதம் வரை புரதச் சத்து உள்ளதால் கால் நடைத் தீவனமாகப் பயன் படுகிறது.

இன்சுலின்:
 சர்க்கரை நோயாளிகளுக்கு காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர இலை அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன் படுத்த வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2 ம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கக் கூடிய சூழிநிலைதற்போது ஏற்பட்டுள்ளது. காஸ்டஸ் பிக்டஸ் என்ற இன்சுலின் தாவரத்தின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதுமானது என்று கூறுகிறார்கள். இந்த தாவரத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக் முறையிலும் தான் தயாரிக்கப் படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்க வில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். ஆனால் சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் அதிக பலன்களைத் தருகிறது என தங்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

ஊமத்தை:
பொதுவாக நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.
இலையைநல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால் கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

எருக்கன்:
இதன் பால் தீ போல சுடும். பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும். விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப் பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைதல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல் பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய பண்புகளையுடையது.

கண்டங்கத்திரி:
கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்ல தொருமருந்து. கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.
answered May 14, 2013 by Chester (1,152 points)
edited May 14, 2013 by Chester
...