• Register
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

தமிழ் வெறும் பேச்சு மொழி ஆகிவிடுமா?

+2 votes
தமிழ் உலகின் மிகச்சிறந்த மொழி என்பதில் மாற்று கருத்தில்லை.. ஆனால் இன்றைய நிலையில் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டும் போய்விடுமா? அறிவியல் மொழியாக வழக்கு மொழியாக தொழில் மொழியாக அரசியல் மொழியாக கடவுள் மொழியாக மக்கள் மொழியாக ஆட்சி மொழியாக அதிகார மொழியாக மாறுமா?
asked May 16, 2013 in இலக்கிய புத்தகங்கள் by BlitzkriegKK (6,860 points)
   

4 Answers

+5 votes
சரியான கேள்வி. இதற்கு நாம் வரலாறை பார்த்தோம் என்றால், 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மேலோங்கி உள்ளது. இதே வேறு சில மொழிகள் படி படியாக அழிந்து விட்டது. இதற்க்கு காரணம் தமிழர்களாகிய நம்முடைய ஆர்வமும் பற்றுமே ஆகும். தமிழ் நாட்டை பொருத்தவரை எப்பொழுதுமே தமிழ் தான் ஆட்சி மொழியாகவும், அரசியல் மொழியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாம் யாருமே இம்மொழியை விட்டு கொடுக்க தயாராக இல்லை.
சமீப காலமாக இணையத்தளத்தில் ஒரு நல்ல கட்டுரை பரவி கொண்டிருக்கிறது. வடக்கிந்திய மக்கள் சென்னையில் வேலை தேடி வரும் பொழுது அவர்கள் நிறைய கஷ்டங்கள் அனுபவிக்கின்றதாக குற்றச்சாட்டு இருக்கின்றது. அவர்களுடைய முதன்மை குற்றச்சாட்டு தமிழர்கள் ஹிந்தி பேசுவதில்லை. பேசினால் புரிந்து கொள்வதில்லை என்று. அவர்களை பொறுத்தவரை ஹிந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்று. அவர்கள் புரிந்து கொள்ளாதது ஹிந்தி நம் நாட்டின் ஒரு ஆட்சி மொழியே தவிர எங்குமே இதை தேசிய மொழியாக(national language) கூறப்படுவதில்லை. நாம் டெல்லி செல்லும் பொழுது அங்கே எல்லாரும் தமிழ் பேச வேண்டும் என்று எதிர்பாராததுபோல் அவர்களும் தமிழ் நாட்டில் ஹிந்தி பேசுவோம் என்று எதிர் பார்க்க கூடாது.
நம்முடைய இந்த க்விக் கன் போன்ற இணையதளங்களின் மூலம் தமிழ் எப்பொழுதுமே மேலோங்கி தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அனால் அதே சமயம், தமிழில் எழுதி பழகும் முறை சற்று குறைந்து உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் . நாம் அனைவருமே இங்கு எழுதுவதில் சில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் யோசித்து ஆராய்ந்து தான் எழுதுகிறோம். இந்த நிலை மாற நாம் எல்லோருமே ஒரு உறுதி மொழி எடுத்து,தமிழில் தினமும் எழுதி பழகி நம் குழந்தைகளுக்கும் கற்று கொடுத்து தமிழை மேலோங்கி வைக்க வேண்டும்.
தமிழர்களாகிய நம் எல்லோருக்கும் இது ஒரு கடமை ஆகும்.
answered May 16, 2013 by kelvirani (842 points)
edited May 16, 2013 by kelvirani
+1 vote

கண்டிப்பாக ஆகாது .. இந்த கேள்வியே அனர்த்தம்.. இப்படி கேள்வி கேட்பவர்களை நிற்க வைத்து உதைக்கலாம்..

answered Jul 16, 2013 by BlitzkriegKK (6,860 points)
0 votes

கேட்டதே நீங்க தானே ....எப்படி இந்த மாற்றம் இரண்டு மாதங்களில்...

answered Jul 16, 2013 by bookworm (4,420 points)
0 votes

தமிழ் இனத்தை, ஒரு தமிழன் ஆளும் நிலை இல்லாதபோது - தமிழ் மொழி மறைந்துபோகும் நிலை ஏற்ப்படும். தமிழர்கள் இதை உணர்வார்களா? தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் தமிழர்கள் இல்லை. தமிழ், தமிழ்நாடு, தமிழ் மக்கள் என தமிழர்களை ஏமாற்றி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் பழம்பெரும் தமிழ் மொழியை வளரச்செய்யும் செயல் ஏதுமில்லை. தமிழை முதற்பாடமாக கொண்டு படிக்கும் மாணவனுக்கு மாநில அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியுமா. மருத்துவமனை, பேருந்து நிலையம், பொது சுகாதார நிலையம், பள்ளிகள், கல்லூரிகள், சட்டசபை, நீதிமன்றம், அலுவலகம், பொது இடங்கள், பொருள் விற்பனை நிலையம், இன்னும் இருக்கும் எல்லா இடங்களிலும் தமிழை மட்டுமே கண்டிப்பாக பயன்படுத்த முடியுமா? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை ஆளும் அரசாங்கம் அமுல்படுத்துமா? தமிழ் மொழியை கேலி செய்யும் ஒருவரை "நாட்டு துரோகி" என தண்டிக்க ஆளும் அரசு முயர்ச்சிக்குமா? நான் ஆள வேண்டும். எனக்கு பிறகு என் குடும்பம் ஆளவேண்டும், குடும்பம் இல்லாவிட்டாலும் இறுதிநாள் வரையில் தன் சுய சிந்தனை கொண்ட எவரும் தமிழ் மொழியை வளர்க்காவிட்டாலும், அம்மொழி அழிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலை தமிழன் காமராஜர் ஒருவருக்குபின் தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும், ஆளப்போகும் தமிழன் அல்லாத தமிழரை ஆளும் ஒரு ஆட்சி மறைவுக்குப்பின் இது சாத்தியம். தமிழன் விழித்துக்கொள்வானா? நன்றி.

answered Apr 22, 2016 by PARTHIBAN.G (1,540 points)
...