• Register
Home arrow Terms
+ ---

Quick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள்.

Terms and Conditions

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  • பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
  • பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது.
  • அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். ஆனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
  • பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!
  • மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்.
  • தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
  • தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்!
  • முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
  • கேள்விகளை கேட்க்கும் முன்னர் அந்த கேள்வி ஏற்கனவே கேட்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
  • மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சங்களைத் தவிர்க்கவும்! உங்களின் வார்த்தைகள் மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
  • நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
  • நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல்(send Feedback) மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
  • தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
  • பதிவுகள் அனைத்தும் Quickgun குழுவால் சரியானதா என பரிசீலிக்கப்பட்ட பின்னரேயே தளத்தில் இடப்படும். உங்கள் படைப்புகள் உங்கள் முகவரியுடனேயே வெளியிடப்படும்.
  • எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை guickgun உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு ta.guickgun பொறுப்பேற்காது. காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் நிர்வாகத்தினருக்கு அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பதிப்புரிமை

  • quickgun.in தளம் முழு பதிப்புரிமை பெற்றது . எவருக்கும் இந்த தளத்தில் உள்ள எழுத்துக்களை எடுத்து பயன்படுத்த உரிமை இல்லை , இதை மீறும் சமயத்தில் அவர்கள்மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு .
...